ETV Bharat / sitara

சொன்ன தேதியில் ஈஸ்வரன் படம் வெளியாகும் - தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஈஸ்வரன் படத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சொன்ன தேதியில் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

சொன்ன தேதியில் ஈஸ்வரன்
சொன்ன தேதியில் ஈஸ்வரன்
author img

By

Published : Dec 31, 2020, 4:34 PM IST

சென்னை: ஈஸ்வரன் படத்தை தடுக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் செயலாளர்கள் சுபாஷ் சந்திரபோஸ், சதீஷ்குமார், துணைத்தலைவர் சிங்கார வடிவேலன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியிடுவது சம்மந்தமாக பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் கண்டனத்திற்குரியது. ‘AAA’ படத்திற்கும் ‘ஈஸ்வரன்’ பட தயாரிப்பாளருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

இந்த கரோனா பிடியிலிருந்து மீண்டு வந்துவிட மாட்டோமா என்று அத்தனை பேரும் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், ‘ஈஸ்வரன்’ படத்தை தைரியமாக வெளியிட முன்வந்திருக்கும் அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நாம் வரவேற்பு கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அந்த தயாரிப்பாளருக்கும், படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கும் போன் செய்து, ஈஸ்வரன் படத்தை வெளியிட வேண்டுமென்றால் ‘AAA’ படத்திற்கு இவ்வளவு கோடி பணம் கட்ட வேண்டுமென்று சொல்வது எந்தவகையிலும் நியாயம் இல்லை. அந்த தீய சக்திகளுக்கு வன்மையான கண்டனத்தை இந்த நேரத்தில் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியாகும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அந்த தயாரிப்பாளருக்கு தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பக்க பலமாக இருக்கும். ‘AAA’ படம் சம்பந்தமாக நிறைய பிரச்னைகள் இருந்தன. அதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த படத்தின் கதாநாயகன் சிம்பு அவரது சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார். மீண்டும் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் இரண்டு பேருக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘AAA’ படத்தின் தயாரிப்பாளருக்கும், நடிகர் சிம்புவுக்கும் சரியான புரிதல் இல்லை. அதன்பிறகு சங்கம் மூலமாக பேசியும், பஞ்சாயத்து மூலமாக பேசியும் எந்தவித பலனும் ஏற்படவில்லை. ஆகையால் சிம்பு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

எனவே அந்த பிரச்னையை நீதிமன்றத்தில்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு நாங்கள் பஞ்சாயத்து செய்து பணத்தை வாங்கி கொடுத்துவிடுவோம் என்று சொன்னால், அவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் மீண்டும் ஒருமுறை எங்களது கண்டத்தை தெரிவிப்பதோடு, சொன்ன தேதியில் ‘ஈஸ்வரன்’ படம் வெளியிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளை வெளியாகும் மாஸ்டர் ட்ரெய்லர்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.