ETV Bharat / sitara

பணம் எனும் மந்திரம்: நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் யுகபாரதி - பணம் எனும் மந்திரம் pdf

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் எழுதிய 'பணம் எனும் மந்திரம்’ நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் யுகபாரதி கலந்துகொண்டுள்ளார்.

Lyricist Yugabharathi
Lyricist Yugabharathi
author img

By

Published : Aug 10, 2021, 6:22 PM IST

சென்னை: நூல் வெளியீட்டு விழாக்களில் நாம் அதிகமாக பார்க்க கூடிய கவிஞர்களில் ஒருவர் யுகபாரதி. பொதுவாக தான் கலந்துகொள்ளும் நூல் வெளியீட்டு விழாக்களில் பல்வேறு பயனுள்ள தகவல்களை பகிரக்கூடியவர். இவர் தற்போது ஆனந்த் சீனிவாசன் எழுதிய 'பணம் எனும் மந்திரம்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், ஆனந்த் சீனிவாசன் எழுதிய `பணம் எனும் மந்திரம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் செந்தில்வேலுடன் கலந்துகொண்டேன்.

பொருளாதாரத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவும், அதைப் பெருக்குவதற்கான வழிகளையும் எளிய மொழியில் ஆனந்த் இந்நூலில் தந்திருக்கிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் பொருளாதாரம் குறித்து பேசுபவர்களில் ஜெயரஞ்சன்,ஜோதிசிவஞானம், ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மற்றவர்களும் பேசுகிறார்கள். என்றாலும், மக்கள் மொழியில் மக்களின் சார்பாக பேசுவதில் இவர்கள் மூவருமே என்னைக் கவர்ந்தவர்கள்.

விழாவில் ஆனந்த எழுதிய ஆங்கில நூலான all about mutual fund எனும் நூலை திருமிகு. ஜெயரஞ்சன் வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.

கடந்த ஐந்தாண்டில் ஆனந்த் சீனிவாசன் துறைசார்ந்த பகிர்விலும் பங்களிப்பிலும் கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

இயல்பாக தோன்றக்கூடிய ஐயங்களைக் கேள்விகளாக்கி, அவற்றுக்கான பதில்களைத் துல்லியமாகவும் புரிந்துக்கொள்ளும்விதத்திலும் இந்நூலில் அளித்திருக்கிறார்.

பணத்தை ஈட்டுவதிலும் பார்க்க, அதைக் காப்பதிலும் சேமிப்பதிலும் நேரக்கூடிய சிக்கல்களை இதைவிட நேர்த்தியாகச் சொல்லித்தர முடியாதென்றே தோன்றிற்று.

ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதால் மந்திரமாகிறது என்பர். நூலின் தலைப்பிலும் அதை விளக்கிய வகையிலும் ஆனந்தின் ஆர்வத்தையும் அரசியலையும் அறியமுடிகிறது.

இது,பொருளாதார அறிதலுக்கான ஆரம்ப நூலே ஆயினும், அடிப்படைகளை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார். அவசியம் வாசிக்கவேண்டிய நூல் என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மீரா மிதுனின் விஷமத்தனம் - எம்.எஸ்.பாஸ்கர் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.