ஐக்கிய அரபு அமீரக அரசால் 2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'கோல்டன் விசா' நீண்ட கால குடியிருப்பு விசாக்களுக்கான புதிய அமைப்பாகும். இந்த விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட் நிலப்பரப்பில் 100 விழுக்காடு உரிமையுடன் வாழவும், வேலை செய்யவும், படிக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடிகர்களைக் கௌரவித்த அரபு அமீரக அரசு
பள்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் திறமைசாலிகளுக்கு அமீரக அரசு பத்து ஆண்டுகளுக்கான கோல்டன் விசா வழங்கி கௌரவித்துவருகிறது. அண்மையில் மலையாள உச்ச நட்சத்திரங்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு கோல்டன் விசா வழங்கி அமீரக அரசு கௌரவித்தது.
இதனைத் தொடர்ந்து மலையாள நடிகர் டொவினோ தாமஸ், பிரித்விராஜ் ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துல்கருக்கு கோல்டன் விசா
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 17) மம்முட்டியின் மகனும், இளம் சினிமா நட்சத்திரமுமான துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. இதற்கு நடிகர் துல்கர் சல்மான், ஐக்கிய அமீரகத்தின் இந்த அங்கீகாரம் தனக்கு கிடைத்த பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திரைப்படத் தயாரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும், சர்வதேச அளவில் புதிய திறமைகளை ஊக்குவிப்பதிலும் முனைப்பு காட்டுவதற்கு அபுதாபி அரசுக்கு துல்கர் சல்மான் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீனு ராமசாமியின் இடிமுழக்கம் படப்பிடிப்பு நிறைவு