ETV Bharat / sitara

ட்ரம்ப்பின் கருத்தால் ஆத்திரமடைந்த ‘பாரசைட்’ இயக்குநர்

'பாரசைட் படம்' பற்றிய ட்ரம்பின் கருத்து குறுகிய கண்ணோட்டத்தை கொண்டுள்ளதாக 'பாரசைட்' பட இயக்குநர் போங் ஜோன் ஹோ கூறியுள்ளார்.

trump
trump
author img

By

Published : Feb 23, 2020, 4:19 PM IST

சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 92ஆவது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான விருது தென் கெரியாவின் பாரசைட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.

இதனையடுத்து இப்படத்திற்கு ஆஸ்கர் வழங்கியதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்ப்பு தெரிவித்தார். அமெரிக்காவின் கொலரோடாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் ட்ரம்ப் பேசியதாவது, ஆஸ்கர் விருதுகள் இந்தாண்டு எவ்வளவு மோசமாக இருந்ததுள்ளன என்று பார்த்தீர்களா? தென்கொரியாவுடன் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் அமெரிக்காவுக்கு உள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டிலிருந்து வந்த படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான விருதை வழங்கியுள்ளனர்.

'பாரசைட்' நன்றாக இருக்கிறதா என்று தெரியவில்லை. கொரியாவில் இருந்து ஒரு சிறந்த திரைப்படம். சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருதை அது பெற்றுள்ளது. இதற்கு முன்பு இவ்வாறு நடந்தது இல்லை என நினைக்கிறேன் என்றார். ட்ரம்ப்பின் இந்த பேச்சு உலகம் முழுவதும் வைரலானது.

ட்ரம்ப்பின் இந்த கருத்துக்கு 'பாரசைட்' பட இயக்குநர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பாரசைட் இயக்குநர் போங் ஜோன் ஹோ கலந்துகொண்டு பேசுகையில், ட்ரம்ப்பின் கருத்து எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரிய படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுவும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவிலான மக்கள் கொரிய படங்களை விரும்பி பார்க்கின்றனர். ட்ரம்பின் கருத்து குறுகிய கண்ணோட்டத்தை கொண்டுள்ளது என்றார்.

இதையும் வாசிங்க: ஆஸ்கர் விருதுகள் வென்ற 'பாராஸைட்' தொலைக்காட்சி தொடராக மாறுகிறதா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.