தி ஹாலிவுட் ரிப்போர்டர் அளித்துள்ள தகவலின்படி, ஸ்கர்லெட் ஜொஹான்சன் நடிப்பில் உருவாகியுள்ள மார்வெல் திரைப்படமான ‘ப்ளாக் விடோ’ நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது அதன் வெளியீடு 2021 மே 7ஆம் தேதிக்கு டிஸ்னி தள்ளிவைத்துள்ளது.
அதேபோல், மார்வெல்லின் ஷாங்-ச்சி & தி லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ் திரைப்படம் மே 7 வெளியாகவிருந்தது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு ஜூலை 9 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
20 செஞ்சுரி தயாரிப்பில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கியுள்ள ‘வெஸ்ட் சைட் ஸ்டோரி’ திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு தள்ளிப்போயிருக்கிறது. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருந்த இத்திரைப்படம், 2021 டிசம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.