இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறும். இந்தச் சூழலில் தற்போது இயக்குநர்கள் சங்கத்துக்கு தலைவராக இருக்கும் விக்ரமன் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைவர், நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணியும் சி.வி. வித்யாசாகரும் போட்டியிடுகின்றனர். அதேபோல் பொருளாளர் பதவிக்கு இயக்குநர்கர் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், ரவி மரியா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதற்கிடையே சங்கத்தில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியில்லாத காரணத்தால் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இயக்குநர்கள் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. வாக்குகள் எண்ணப்பட்டு இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.