ETV Bharat / sitara

விஜய்யை வைத்து படம் இயக்கும் வெற்றிமாறன்? - பீஸ்ட் அப்டேட்

விஜய்யுடன் இணைந்து படம் பண்ணுவதற்கு மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

vijay
vijay
author img

By

Published : Oct 28, 2021, 4:23 PM IST

வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி - சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், வெற்றிமாறன் விஜய்யை வைத்து படம் இயக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வார இதழ் ஒன்றுக்கு வெற்றிமாறன் அளித்த நேர்காணலில், “என் பக்கம் தான் தாமதம் ஆகிறது. விஜய் தரப்புல, கைவசம் இருக்கும் படங்களை முடிச்சிட்டு வாங்கன்னு சொல்லிருக்காங்க.

இன்னைக்கு இருக்கிற சூப்பர் ஸ்டார்ல விஜய் சாரோட படம் பண்றதுக்கான வாய்ப்பிருக்கிறது ரொம்ப சந்தோஷம். அதனால், இப்போ இருக்கிற படங்களை முடிச்சிட்டு விஜய் சார்கூட படம் பண்றதுல ரொம்ப ஆர்வமா இருக்கேன்” என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

விஜய் தற்போது நெல்சனுடன் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து விஜய் வம்சி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதைத்தொடர்ந்து 'மாஸ்டர்' இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் 'தளபதி 67' படத்தில் மீண்டும் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படங்களை தொடர்ந்து விஜய் வெற்றிமாறனுடன் சேர்ந்து புதியப்படத்தில் பணியாற்றுவார் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: #HBD வெற்றிமாறன்... வெல்வோமே... வீழாமல்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.