நடிகர் நிதின் சத்யா தன்னுடைய புரொடக்ஷன் ஹவுஸ் சார்பில் வைபவை கதாநாயகனாக வைத்து புதிய படமொன்றை பிரமாண்ட செலவில் தயாரித்து வருகிறார். ஜருகண்டி படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இப்படத்தை இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சார்லஸ் இயக்குகிறார். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் வாணி போஜன், ஈஸ்வரி ராவ், பூர்ணா, 'மைம்' கோபி ஆகியோர் நடிக்கின்றனர்.
காதல், காமெடி கதைகளில் நடித்து வந்த வைபவ் முதல் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்தின் பணிகள் 70% முடிந்துவிட்ட நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு முதன் முறையாக இப்படத்தில் வைபவை எதிர்த்து சண்டை போடும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காவல்துறை உயரதிகாரியாக அவர் இதில் நடிக்கிறார்.
![venkat prabhu villain](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/121555905578482-46_2204email_00044_219.jpg)
காமெடியான கதைக்களத்துடன் ரசிகர்களுக்கு பிடித்த இயக்குநராக இருக்கும் வெங்கட் பிரபு வில்லனாக நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.