ETV Bharat / sitara

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' - இயக்குநர் வசந்தின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

இயக்குநர் வசந்த் தயாரித்து இயக்கியுள்ள 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் விரைவில் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

Sivaranjaniyum
Sivaranjaniyum
author img

By

Published : Nov 11, 2021, 4:40 PM IST

தமிழ் சினிமாவில் 'ஆசை', 'நேருக்கு நேர்', 'ரிதம்', 'சத்தம் போடதே' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வசந்த் எஸ் சாய். இவர் தனது சொந்த தயாரிப்பில் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமெளலி, காளிஸ்வரி, நடிகர் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரபல எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் கதை எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு - ஏகாம்பரம், ரவி ராய். படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்.

  • ‘Sivaranjani and two other women’ is a sensitive capturing of the micro awakenings of identity, space and self-worth when family dynamics, early marriage and pregnancy threaten to usurp the individuality of three different women. pic.twitter.com/9XMNq7s21l

    — SonyLIV International (@SonyLIVIntl) November 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பாடல்கள், இல்லாமல் வெறும் நேரடி சத்தங்களை வைத்தே படம் உருவாகியுள்ளது. இளையராஜா பின்னணி இசையமைத்துள்ளார். இன்னும் திரைக்கு வராத இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளை வாரிக் குவித்தது.

இந்நிலையில், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: ரிலீசுக்கு முன்பு சர்வதேச விருது பெற்ற 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.