ETV Bharat / sitara

நிஜ கபடி வீரர்களால் தான் 'கென்னடி கிளப்' சாத்தியம் - இயக்குநர் சுசீந்திரன்

author img

By

Published : Aug 23, 2019, 3:59 PM IST

பெண்கள் கபடியை மையமாக வைத்து வெளியாகியுள்ள ‘கென்னடி கிளப்’ படத்தின் இயக்குநர் சுசீந்திரனுடன் சிறப்பு நேர்காணல்...

susinthiran

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள திரைப்படம் ‘கென்னடி கிளப்’. ஆண்கள் கபடியை மையமாக வைத்து ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் சுசீந்திரன். தற்போது பெண்கள் கபடியை மையமாக வைத்து ‘கென்னடி கிளப்’ படத்தை இயக்கியிருக்கிறார். நெல்லுசாமி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

இது குறித்து சுசீந்திரன் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்

இயக்குநர் சுசீந்திரனுடன் சிறப்பு நேர்காணல்

இந்த படம் குறித்த உங்கள் கருத்து?

ரொம்ப சந்தோஷமா இருக்கு வெண்ணிலா கபடி குழு மாதிரி இந்த படமும் பெரிய ஹிட்டாகும் என்று படம் பார்த்தவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெளியூரில் இருந்து நிறைய போன் கால் வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நடிகர் சசிகுமாருக்கும் எனக்கும் மிகப்பெரிய ஹிட் இந்த படம். கண்டிப்பா கபடியில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் பாரதிராஜாவுடன் பணியாற்றியது குறித்து ?

இயக்குநர் பாரதிராஜா ஸ்கிரீனில் வந்து நின்றாலே திரையில் ஒரு பிளசன்ட் ஆக இருக்கும். படம் பார்த்த அனைவரும் பாரதிராஜாவின் நடிப்பு அருமையாக இருந்தது என்று பாராட்டினார்கள். பாண்டிய நாட்டிற்கு பிறகு பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

கண்டிப்பாக இந்த படத்தில் அவருக்கு தேசிய விருது கிடைக்கும். அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது. ஏனென்றால், கிளைமாக்ஸ் அவர் மீது தான் இருக்கும். படம் பார்த்த அனைவரும் கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

நடிகர் சசிகுமாருடன் பணியாற்றியது குறித்து?

நடிகர் சசிகுமார் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். நடை உடை சிகை அலங்காரம் என அனைத்தையும் மாற்றியுள்ளார். கபடி பயிற்சியாளராக முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நிஜ கபடி வீரர்களை பயன்படுத்தக் காரணம் என்ன?

இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவருமே நிஜ கபடி வீரர்கள். இப்படித்தான் விளையாட வேண்டும் என்று யாருக்கும் நாங்கள் சொல்லிக் கொடுக்கவில்லை. நடிப்பு நான் சொல்லிக் கொடுத்தது. போட்டி எல்லாம் நிஜமான போட்டிகளாகவே நடந்தது. அனைத்து வீரர்களும் நிஜமாகவே விளையாடினார்கள். சாதாரண நடிகர்களை வைத்து இதுபோன்ற படம் எடுக்க முடியாது. விளையாட்டு வீரர்களால் தான் இந்தபடம் சாத்தியமானது.

அந்த வீரர்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்கு எடிட்டிங் மிக முக்கியமாக அமைந்தது. எடிட்டிங்கில் அதிக வேலை, மிகப்பெரிய பங்கு எடிட்டிங் டிபார்ட்மென்ட்க்கு நன்றி.

வெண்ணிலா கபடி குழுவை எடுத்த பிறகு தொடர்ந்து விளையாட்டு தொடர்பான படங்கள் வருகிறது இது குறித்து?

சந்தோஷமாக இருக்கு முதலில் சென்னை28 வந்தது, அது ஒரு fun படமாக இருந்தது. ஆனால் வெண்ணிலா கபடி குழு ஒரு உணர்ச்சிப்பூர்வமான படமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். தமிழ் சினிமாவில் இன்னும் விளையாட்டு தொடர்பான அதிக படங்கள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

ஏனென்றால் விளையாட்டிலும் அரசியல் உள்ளது. அந்த அரசியலை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்வும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஹிந்தியில் இது போன்ற படங்கள் அதிகமாக வருகின்றது. ஆனால், தமிழில் வருவதில்லை.

அடுத்து உங்களுடைய படம்?

சாம்பி என்ற ஃபுட்பாலை மையமாக வைத்து ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறேன். இது ஒரு கமர்ஷியல் படமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நார்த் மெட்ராஸ், மெட்ராஸில் இருக்கும் வயலன்ஸ் பற்றியும் இதில் கூற உள்ளேன்.

வெண்ணிலா கபடி குழு ஜீவா கென்னடி கிளப் இல் இருந்து கொஞ்சம் வித்தியாசமாக இந்த படம் இருக்கும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.