சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்று நோயை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி, இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை "ஜனதா கர்ஃப்யூ" எனப்படும் மக்கள் ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, திரைப்பிரபலங்கள் பலர் தங்களது ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவுரைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று பதிவிட்டுள்ளார்.
அதில், “நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 144 இந்த வார்த்தையை நம் வாழ்க்கையில் நாம் சந்திப்போம்னு யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாளை வாழ்நாள் முழுவதும் நாம் ஞாபகம் வைத்திருக்கும் விதமாகவும், அதேநேரத்தில் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (அ) எதிர்ப்பாற்றல் எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் விதமாக, இன்று மக்கள் ஊரடங்கு நடைபெற்று வரும் நேரத்தில் அனைவரும் ஒரு மரம் நடுவோம்.
இது இன்று நடைபெறும் நிகழ்வு வாழ்நாள் முழுவதும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும் - ஆர்.வி.உதயகுமார்