தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். அதைத்தொடர்ந்து 'நான் மாகன் அல்ல', 'ராஜபாட்டை', 'ஆதலால் காதல் செய்வீர்' போன்ற படங்களை இயக்கினார். கடைசியாக விஷ்வாவை வைத்து சாம்பியன் என்ற படத்தை இயக்கினார்.
சுசீந்திரன் நேற்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது வாகனம் மோதியுள்ளது. அந்த விபத்தில் சுசீந்திரனுக்கு, கை முறிவு ஏற்பட்டதையடுத்து, லேசர் மூலம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மூன்று வாரங்களுக்கு அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நடைபயிற்சிக்கு சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த சுசீந்திரன, விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், கடவுளை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பிங்க்' தெலுங்கு ரீமேக்கின் புதிய அப்டேட்!