மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன் மீது நடிகை மஞ்சு வாரியர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி சமீபத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். முன்விரோதம் காரணமாக தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகார் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீகுமார் மேனனை திருச்சூர் காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து மூன்று மணி நேரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர் உறுதி அளித்ததை அடுத்து, பிணையில் விடுவிக்கப்பட்டார்.