இயக்குநர் ஷங்கரின் திரைப்படங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைத்து வந்தார். இடையில் 'அந்நியன்', 'நண்பன்' படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். தற்போது கமலின் 'இந்தியன் 2' படத்தில் அனிருத்துடன் கைகோர்த்துள்ளார் சங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. எனவே தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஒரு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். . இப்படத்திற்கும் அனிருத் இசை அமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
'இந்தியன் 2' படத்திற்கு அனிருத் அமைத்திருந்த இசை ஷங்கருக்கு பிடித்து போகவே ராம் சரண் படத்திற்கு இசையமைக்க ஷங்கர் விரும்பியுள்ளார். ஷங்கரின் விருப்பத்திற்கு ராம் சரண், தயாரிப்பாளர் தில் ராஜூ சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.