ETV Bharat / sitara

உளவியல் பாணி திரில்லராக உருவாகும் பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' - யாருக்கும் அஞ்சேல் திரைப்படம்

இரண்டு சகோதரிகள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை அவர்கள் உளவியல் ரீதியில் எப்படி அணுகுகிறார்கள் என்பதை திரில்லர் பாணியில் கூறும் படமாக அமைந்திருக்கும் 'யாருக்கும் அஞ்சேல்' படத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருப்பதாக இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி கூறியுள்ளார்.

Bindu Madhavi new movie titled Yaarukkum Anjael
Actress Bindu Madhavi
author img

By

Published : Mar 6, 2020, 8:35 PM IST

சென்னை: 'யாருக்கும் அஞ்சேல்' படத்தின் கதை குறித்து இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி விவரித்துள்ளார்.

'தெர்டு என்டர்டெயின்மென்ட் சார்பில் புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் இயக்கிய ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படம் 'யாருக்கும் அஞ்சேல்'. இந்தப் படத்தில் பிந்து மாதவி, தர்ஷனா பானிக் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பை நடிகர் சிலம்பரசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ரத்தத்தை வைத்து பட்டாம்பூச்சி ஓவியம் வரையப்பட்டவாறு இருக்கும் படத்தின் டைட்டில் போஸ்டரில், 'அல்லவை வெல்ல, நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்' என்று வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.

Bindu Madhavi new movie titled Yaarukkum Anjael
Bindu Madhavi latest photoshoot

இந்தப் படம் குறித்து இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி கூறியதாவது:

'இந்தப் படத்தில் மிகக் கடினமாக இருந்தது தலைப்பு வைக்கும் பணிதான். பல விதமான தலைப்புகளை அலசி, இறுதியாக 'யாருக்கும் அஞ்சேல்' என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தோம்.

ரசிகர்கள் முழுப்படத்தையும் பார்த்து முடிக்கும் போது, இந்த தலைப்புதான் மிகச்சரியானது என்பதை உணர்வார்கள். படத்தின் தலைப்பை நடிகர் சிலம்பரசனும், நடிகர் விஜய் சேதுபதியும் வெளியிட்டது எங்களுக்கு பெரு மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டதால், படத்தின் தலைப்பு பெரிய அளவில் ரசிகர்களைச் சென்றடைந்துள்ளது.

இரண்டு சகோதரிகள் தங்களுக்குப் பாத்தியப்பட்ட நிலத்தை விற்க தங்களது சொந்த ஊருக்குப் பயணமாகிறார்கள். அவர்கள் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை, அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதத்தை, உளவியல் ரீதியில் அணுகும் திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

சகோதரிகளாக பிந்து மாதவியும் தர்ஷனா பானிக்கும் நடித்திருக்கிறார்கள். படத்தின் முழுப்படப்பிடிப்பையும் 30 நாட்களில் ஊட்டியில் முடித்துவிட்டோம். தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வெகு விரைவில் அந்தப் பணிகளும் முடிவடையவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர், இசை வெளியீடு மற்றும் திரை வெளியீடு பற்றி மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிந்து மாதவி கடந்த ஆண்டு வெளியான 'கழுகு 2' படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து தற்போது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகி வரும் 'யாருக்கும் அஞ்சேல்' படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க:

'இயக்குநரை டார்ச்சர் செய்தேன்' - தொகுப்பாளர் ரக்சன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.