இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில், நடிகர் விக்ராந்த், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் இணைந்து நடித்துள்ள படம் ’சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தில் அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
![சுட்டு பிடிக்க உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2019-06-08-at-135248-11560054864942-0_0906email_1560054876_786.jpeg)
இப்படம் குறித்து ராம்பிரகாஷ் ராயப்பா, மிஷ்கின், சுசீந்திரன் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், நானே அவர்களின் நுணுக்கமான நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
![சுட்டு பிடிக்க உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2019-06-08-at-1352481560054864941-52_0906email_1560054876_70.jpeg)
பெரிய இயக்குநர்களை வைத்து இயக்கும்போது அவர்களது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர்கள் நடிப்பில் மட்டுமே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தினார்கள். ஆலோசனையோ அல்லது மாற்றங்களையோ என்னிடம் கூறவில்லை.
![சுட்டு பிடிக்க உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/whatsapp-image-2019-06-08-at-1352491560054864944-64_0906email_1560054876_227.jpeg)
படத்தின் கதை பற்றி வெளிப்படுத்த விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியமான விஷயங்களை கொண்ட திரில்லர் உணர்வை கொண்டிருக்கும் என்று தெரிவித்தார்.