பத்திரிக்கையாளராக இருந்து பிறகு தமிழ் சினிமாவில் ‘குக்கூ' திரைப்படம் முலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜு முருகன். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் வைத்து 'ஜோக்கர்' படத்தினை ராஜு முருகன் இயக்கினார்.
இதையடுத்து இவரது இயக்கதில் சமீபத்தில் வெளியான 'ஜிப்ஸி' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரும், தொகுப்பாளர் ஹேமாவும் காதலித்து, கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று மாலை ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதையும் படிங்க: லாக் டவுனால் ஜிம் லாக்... இதை வச்சி உடற்பயிற்சி செய்யலாம் - ஜிம் 'மாஸ்டர்' சாந்தனு!