ETV Bharat / sitara

நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் - இயக்குநர் ஆர்.வி உதயகுமார் படங்கள்

நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை, நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது என்று இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கூறியுள்ளார்.

Udayakumar
Udayakumar
author img

By

Published : Feb 1, 2020, 9:06 AM IST

மின்னல் முருகன் இயக்கத்தில் அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் 'புறநகர்'. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் மன்சூர் அலிகான், அபி சரவணன், சண்டை கலைஞர் ஜாகுவார் தங்கம், படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ், இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

புறநகர் இசை வெளியிட்டு விழாவில் ஆர்.வி.உதயகுமார்

இதில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், எத்தனை ஆண்டுகள்தான் சாதியை பேசுவார்கள். சாதி இல்லையென்றால் இட ஒதுக்கீட்டை கேட்க முடியாது. அனைவரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்ல முன்வர வேண்டும். சாதி உணர்வில் இயக்குநர்கள் குழுவாக சேருகிறார்கள் என்றாலும் அதை நம்மால் தடுக்க முடியாது.

நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை நன்றியை எதிர்பார்த்து சினிமா தொழில் செய்ய முடியாது. வெளிமாநிலங்களில் படம் எடுக்காமல் இங்கேயே படப்பிடிப்புத் தளத்தை அமைக்க வேண்டும். ஐதராபாத்தில் ராமோஜிராவ் தளத்தின் வெளியேதான் செட் அமைத்து 'வலிமை' படத்தை எடுக்கிறார்கள். அந்த செட்டை இங்கேயே அமைக்கலாம். சண்டைக் கலைஞர்களும் வெளியில் இருந்து அழைத்து வருகிறார்கள். இங்கிருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்றார்.

Intro:புறநகர் இசை வெளியீட்டு விழாBody:அறிமுக நாயகன் கமல் கோவிந்தராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ' புறநகர்' இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் , தயாரிப்பாளர் கே.ராஜன் , இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான் , நடிகர் அபி சரவணன் , சண்டைக் கலைஞர் ஜாகுவார் தங்கம் , படத்தின் கதாநாயகன் கமல் கோவிந்த்ராஜ் , இயக்குநர் மின்னல் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

1. "ஒரு கை ஓசை' படத்திலேயே சாதியை எதிர்த்தேன் ; டிக்கெட் விலையைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு நடிகர்களுக்கு உண்டு" - கே.பாக்யராஜ்.

'ஒரு கை ஓசை ' படத்திலேயே நான் சாதியை எதிர்த்துள்ளேன். வெள்ளாங்கோயில் எனும் ஊரில் என் சிறுவயதில் சாதித் தீண்டாமையை டீக் கடைகளில் பார்த்தேன். அதை மனதில் வைத்துதான் 'சங்கிலி முருகன்' எனும் கதாபாத்திரத்தை அந்தப் படத்தில் இணைத்தேன் , சாதிப் பிரச்சனை தற்போது அதிகமாகியுள்ளது. அனைவரும் சமம் , சாதி கிடையாது என்பது நகரங்களைப் போல கிராமங்களிலும் வர வேண்டும்.
சம்பாதிக்கும் பணத்தில் பாதியை மற்றவர்களளுக்கு வழங்க முன்வர வேண்டும் , டிக்கெட் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு கதாநாயகர்களுக்கும் உண்டு.

3. "நன்றியை எதிர்பார்த்து சினிமாத் தொழில் செய்ய முடியாது" - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

எத்தனை ஆண்டுகள்தான் சாதியை பேசுவார்கள், ஈவெரா நாயுடு தான் . ஆனால் அவர் அதை காட்டிக் கொள்ளவில்லை. *சாதிப் பெயர் பள்ளிக் கூடத்திலேயே கேட்கப்படுகிறது, இதை தவிர்த்தாலே சாதி அழிந்துவிடும். ஆனால் சாதி இல்லையென்றால் இடவொதுக்கீட்டை கேட்க முடியாது. அனைவரும் இட ஒதுக்கீடு வேண்டாம் என சொல்ல முன்வர வேண்டும்.
சாதி உணர்வில் இயக்குநர்கள் குழுவாக சேருகிறார்கள் என்றாலும் அதை நம்மால் தடுக்க முடியாது.

நான் வெற்றிப் படங்களைக் கொடுத்த பிறகும் பல கதாநாயகர்கள் என்னிடம் படத்தைத் தர முன்வரவில்லை நன்றியை எதிர்பார்த்து சினிமாத் தொழில் செய்ய முடியாது.

எம்ஜிஆர் சிபாரிசு செய்து திரைப்படக் கல்லூரியில் 1981 ல் நான் சேர்ந்தேன். நீலகண்டன் எனும் இயக்குநரை தேடி எம்ஜிஆர் ஒருமுறை என்னுடைய கல்லூரிக்கு வந்தார் . அந்த இயக்குநரை நேரடியாக தேடிச் சென்று பார்த்தார் அவர் . நான் அழைத்து வருவதாக சொன்னபோதும் அவரே தேடிப்போய்ப் பார்த்தார்.
13 ஆண்டுகள் முதல்வராக இருந்த எம் ஜிஆர் தான் நடித்தபோது சம்பாதித்த பணத்தைத்தான், கடைசிவரை வைத்திருந்தார், இறக்கும்போது தன் கல்லூரி ,வீடு அனைத்தையும் ஏழைகளுக்கு எழுதி வைத்தார்.

வெளிமாநிலங்களில் படம் எடுக்காமல் இங்கேயே படப்பிடிப்புத் தளத்தை அமைக்க வேண்டும் ,
ஐதராபாத்தில் ராமோஜிராவ் தளத்தின் வெளியேதான் செட் அமைத்து 'வலிமை' படத்தை எடுக்கிறார்கள், அந்த செட்டை இங்கேயே அமைக்கலாம். சண்டைக் கலைஞர்களும் வெளியில் இருந்து அழைத்து வருகிறார்கள். இங்கிருக்கும் கலைஞர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்.

3. அஜித்தை அறிமுகப்படுத்திய சோழா பொன்னுரங்கம் சிரமத்தில் இருக்கிறார்; அஜித் ஸ்ரீதேவி கணவருக்கு படம் கொடுத்து கோடிகளை சம்பாதிக்கிறார் -
தயாரிப்பாளர் கே. ராஜன்

சில ரசிகர்கள் 1000 ரூபாயில் டிக்கெட் எடுத்து படம் பார்க்கிறார்கள் . சினிமாக்காரர்கள் அரசை கண்டிப்பதும் , பிறகு மன்னிப்புக் கேட்பதும் தற்போது நடைமுறையில் இருக்கிறது.
பல கோடி போட்டு படம் எடுத்துவிட்டு ஆயிரக் கணக்கில் டிக்கெட் வாங்குகிறார்கள் ,இவர்கள் எப்படி மக்கள் தலைவனாக இருக்க முடியும்?யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை.
எம்ஜிஆர் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்.
ரஜினிகாந்த் முதலில் நடித்தது கூட சிறுபடம்தான்.

அஜித்தை சோழா பொன்னுரங்கம் எனும் தயாரிப்பாளர் கதாநாயகனாக்கினார். தற்போது அவர் சிரமத்தில் இருக்கிறார்.ஆனால் அஜித் ஸ்ரீதேவி கணவருக்கு படம் நடித்து கொடுக்கிறார், இதன் மூலம் அஜித் கணக்கில் சில கோடி ரூபாய் வருமானம் சேரும். கதாநாயகர்கள் தங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களை ஒருபோதும் மறக்கக் கூடாது.

4. சாதியை சொல்லி படம் எடுப்பவர்களை நான் செருப்பால் அடிப்பேன் -
இயக்குநர் தருண் கோபி,

சினிமா இன்று சீரழிந்து விட்டது, சாதி இல்லையென்று சொல்லும் ஒரே ஊடகம் சினிமாதான் . ஆனால் இன்று சினிமாவில் சில இயக்குநர்கள் தங்கள் சாதியை உயர்த்துவதற்காக பிற சாதியை தாழ்த்துகிறார்கள்.படங்களை கலைப் படமாக எடுக்க வேண்டும், சாதிப் படமாக எடுக்காதீர்கள். சாதியை சொல்லி படம் எடுப்பவர்களை நான் செருப்பால் அடிப்பேன் .திரௌபதி படத்திற்கு பலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் , எல்லோருக்குள்ளும் சாதி உணர்வு இருப்பது இதன்மூலம் தெரிகிறது.

Conclusion:( புறநகர் இசை வெளியீட்டு விழா செய்தி நீங்கள் கேட்டதால் மீண்டும் அனுப்பி உள்ளேன். அனைத்து செய்தியையும் ஒன்றாக அனுப்பி உள்ளேன். பார்த்து எடுத்துக் கொள்ளவும்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.