ETV Bharat / sitara

9 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஆகிறார் 'போடா போடி' தயாரிப்பாளர்! - இயக்குநராக அவதரிக்கும் பதம் குமார்

நடிகர் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போடா போடி'. இந்தப் படத்தை தயாரித்த பதம் குமார் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநராக மீண்டும் திரையுலகில் கால் பதிக்க உள்ளார்.

Director Padam Kumar New Movie update
Director Padam Kumar New Movie update
author img

By

Published : Jan 4, 2020, 8:54 PM IST

ஹிந்தியில் பல படங்களை இயக்கிய பதம் குமார், தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளார். பதம் குமார், 'புரியாத புதிர்', 'ஆக்கோ' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் தீபன் பூபதியும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

முதல் படத்தில் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளிலும் பிரபலமான முக்கிய நடிகர் ஒருவரும், அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகளும் நடிக்க உள்ளார்களாம். திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் முன்னாள் காதலியும் இன்னொரு பெண்ணும் நுழைய அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை மியூசிக்கல் த்ரில்லராகச் சொல்வது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்தப் படத்தை பதம் குமாரே இயக்குகிறார்.

இதேபோன்று கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாக உள்ள ஆக்ஷன் படத்தை தயாரிக்க உள்ளார் பதம் குமார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்தப் படத்திற்கு விஸ்வரூபம் படத்தில் ஆக்ஷன் பணிகளை கவனித்த கேஷா என்பவர் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.

மூன்றாவது படம் ஒரு நாயகன், இரண்டு நாயகிகளைக்கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கனடாவில் இருந்து இந்தியாவிற்கு நடிக்கவரும் பெண்ணை மையமாக வைத்து இந்தக் கதை உருவாகப்போகிறது.

இந்த மூன்று படங்களின் படபிடிப்பு இந்தியா, கனடா, தாய்லாந்து நாடுகளில் நடக்க உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் கனடாவின் தலைநகரமான ஒட்டாவா (Ottowa) அரசின் மேயர் இப்படங்களை புரமோட் செய்ய உள்ளார். மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சுஷ்மிதா சென்

Intro:மூன்று படங்களோடு களமிறங்கும் இயக்குனர் பதம் குமார்.Body:நடிகர் சிம்பு, வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் போடா போடி. இந்தப் இந்தப்படம் தயாரிப்பாளர்களில் ஒருவரான பதம் குமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனராக மீண்டும் கால் பதிக்க உள்ளார்.

ஹிந்தியில் பல படங்களை இயக்கிய தற்போது மீண்டும் பட தயாரிப்பிலும் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளார். பதம் குமார் மற்றும் புரியாத புதிர், ஆக்கோ படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதியும் இணைந்து மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் .

முதல் படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழியிலும் பிரபலமான முக்கிய நடிகரும் அவருக்கு ஜோடியாக மூன்று நாயகிகளும் நடிக்க உள்ளார்களாம்.

திருமணமான ஒரு நபரின் வாழ்க்கையில் முன்னாள் காதலியும் இன்னொரு பெண்ணும் நுழைய அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை ம்யூசிக்கல் திரில்லராக சொல்வது தான் இப்படத்தின் கதை என கூறப்படுகிறது. இந்த படத்தை பதம் குமரே இயக்க உள்ளார்.

இதேபோன்று நடிகையை மையமாக கொண்டு உருவாக உள்ள ஆக்ஷன் படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு விஸ்வரூபம் படத்திற்கு ஆக்ஷன் பணிகளை கவனித்த ஷேக்ஷா என்பவர் ஸ்டண்ட் பணிகளை மேற்கொள்ள உள்ளார். இப்படத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடிக்கும் முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்திய அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.

மூன்றாவது படமாக ஒரு நாயகன் மற்றும் இரண்டு நாயகிகளை கொண்ட ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கனடாவில் இருந்து இந்தியாவிற்கு நடிக்க வரும் பெண்ணின் கதை தான் இப்படம்.

இந்த 3 படங்களின் படபிடிப்பு இந்தியா, கனடா மற்றும் தாய்லாந்து நாடுகளில் நடக்க உள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் கனடாவின் தலைநகரமான ஒட்டாவா ( Ottowa ) அரசின் மேயர் இப்படங்களை ப்ரொமோட் செய்ய உள்ளார்.

Conclusion:இன்னும் ஓரிரு வாரங்களில் படக்குழு மற்றும் டெக்னீஷியன் டீம் லொகேஷன்களை தேர்வு செய்ய கனடா செல்ல உள்ளனர். மே மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.