சென்னை அண்ணா சாலை தீவுத்திடல் எதிரே உள்ள எஸ்.எம்.நகர் மற்றும் காந்தி நகரில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பூர்வக்குடியாக அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
அண்மையில், கூவம் அருகே வாழ்ந்து வரும் பூர்வக்குடிகளை அப்புறப்படுத்தக்கோரி மாநகராட்சி துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி இன்று ( டிச.9) மாநகராட்சி துறை அலுவலர்கள் முதற்கட்டமாக எஸ்.எம் நகரில் வசிக்கும் 400 குடும்பங்களின் வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காலம் காலமாக வாழ்ந்து வரும் பூர்வக்குடி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் செய்தனர்.
இந்நிலையில், சென்னை தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஆளும்கட்சியினர் சென்னையை சுத்தப்படுத்தும் திட்டத்தை மட்டும் தான் சரியாக செய்து வருகின்றனர்.
-
வீடு இழந்து, கல்வி தடைப்பட்டு, வேலைவாய்ப்பினை இழந்து அல்லல் படும் சென்னை குடிசைவாழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையான சென்னை வட்டாரத்திற்குள்ளாகவே மாற்று வீடு கோரிக்கையாவது நிறைவேற்றுங்கள்? உங்கள் அரசால் துரத்தப்படுவது வெரும் மக்கள் மட்டும் அல்ல வாக்குகளையும் தான். pic.twitter.com/VCnwBFvlYN
— pa.ranjith (@beemji) December 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வீடு இழந்து, கல்வி தடைப்பட்டு, வேலைவாய்ப்பினை இழந்து அல்லல் படும் சென்னை குடிசைவாழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையான சென்னை வட்டாரத்திற்குள்ளாகவே மாற்று வீடு கோரிக்கையாவது நிறைவேற்றுங்கள்? உங்கள் அரசால் துரத்தப்படுவது வெரும் மக்கள் மட்டும் அல்ல வாக்குகளையும் தான். pic.twitter.com/VCnwBFvlYN
— pa.ranjith (@beemji) December 9, 2020வீடு இழந்து, கல்வி தடைப்பட்டு, வேலைவாய்ப்பினை இழந்து அல்லல் படும் சென்னை குடிசைவாழ் மக்களின் மிக நியாயமான கோரிக்கையான சென்னை வட்டாரத்திற்குள்ளாகவே மாற்று வீடு கோரிக்கையாவது நிறைவேற்றுங்கள்? உங்கள் அரசால் துரத்தப்படுவது வெரும் மக்கள் மட்டும் அல்ல வாக்குகளையும் தான். pic.twitter.com/VCnwBFvlYN
— pa.ranjith (@beemji) December 9, 2020
ஆக்கிரமிப்பை அகற்றினால் அப்பகுதியில் இருந்து 8 கி.மீ தொலைவுக்குள் இடம் தர வேண்டும், ஆளும்கட்சி ஒதுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளை கண்டுகொள்வதில்லை. இதில் தலையிட்டு அப்பகுதி மக்களின் அடிப்படை கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: திருமாவளவன் மட்டும்தான் பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தாரா? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி