திரைத் துறையினர் குறித்து இழிவான கருத்து தெரிவித்துவந்த மீரா மிதுன் இந்தமுறை பட்டியலின சமூகத்தினரை இழிவாகப் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அழைப்பாணை தொடர்பாக மற்றொரு காணொலியில் பேசிய மீரா மிதுன், தாராளமாக என்னைக் கைதுசெய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்குச் செல்லவில்லையா? என்னைக் கைதுசெய்வது நடக்காது; அப்படி நடந்தால், அது உங்கள் கனவில்தான் நடக்கும்" எனப் பேசியிருந்தார்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து திரைப்பட இயக்குநர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சமூகநீதியே தமிழ்நாட்டின் முதன்மைக் கொள்கை என்பதையும், சக மனிதர்களைச் சாதி அடிப்படையில் இழிவாகப் பேசுவதைத் தமிழ்நாடு ஏற்காது என்பதையும் உணர்த்தும் நேரமிது. இந்தப் பெண் மீது இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: பட்டியலின அவதூறு வழக்கில் விசாரணைக்கு ஆஜர் ஆகாத நடிகை மீரா மிதுன்!