சென்னை: முதலிரவு சம்பந்தப்பட்ட கதையில் தந்தையும் மகனுமான பாக்யராஜ் - சாந்தனு இணைந்துள்ளனர்.
லிப்ரா புரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் சரவணபிரியன், சிவசுப்பிரமணியன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சாந்தனு - அதுல்யா ரவி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர், நடிகர் பாக்யராஜ் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ஸ்ரீஜர் இயக்குகிறார். திருமணத்துக்குப் பின் முதலிரவுக்காக நடக்கும் சம்பிரதாயங்களை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் காமெடி சொல்லும் விதமாக இந்தப் படம் உருவாகவுள்ளது. படத்தில் யோகிபாபு, மதுமிதா, ரேஷ்மா, மயில்சாமி, ஆனந்த் ராஜ், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், பிராங் ரகுல் எனப் பலர் நடிக்கிறார்கள்.
-
@LIBRAProduc @firstmanfilms jointly produces #untitledfilm *ing #KBhagyaraj @imKBRshanthnu @iYogiBabu @manobalam #Mayilswamy #Anandraj @AtulyaOfficial @reshupasupuleti #madhumitha
— LIBRA Production (@LIBRAProduc) March 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
dir @Srijar1 Music @dharankumar_c Dop #Rameshchakravarthi @nivethajoseph #Narmadhaveni @onlynikil pic.twitter.com/Pxi3aEfP8i
">@LIBRAProduc @firstmanfilms jointly produces #untitledfilm *ing #KBhagyaraj @imKBRshanthnu @iYogiBabu @manobalam #Mayilswamy #Anandraj @AtulyaOfficial @reshupasupuleti #madhumitha
— LIBRA Production (@LIBRAProduc) March 13, 2020
dir @Srijar1 Music @dharankumar_c Dop #Rameshchakravarthi @nivethajoseph #Narmadhaveni @onlynikil pic.twitter.com/Pxi3aEfP8i@LIBRAProduc @firstmanfilms jointly produces #untitledfilm *ing #KBhagyaraj @imKBRshanthnu @iYogiBabu @manobalam #Mayilswamy #Anandraj @AtulyaOfficial @reshupasupuleti #madhumitha
— LIBRA Production (@LIBRAProduc) March 13, 2020
dir @Srijar1 Music @dharankumar_c Dop #Rameshchakravarthi @nivethajoseph #Narmadhaveni @onlynikil pic.twitter.com/Pxi3aEfP8i
படத்துக்கு இசை - தரண். ஒளிப்பதிவு - ரமேஷ் சக்ரவர்த்தி. இதையடுத்து படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் சாந்தனு. அந்தப் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர், தற்போது புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். அத்துடன் தனது தந்தை பாக்யாராஜூடன் இணைந்து நடிக்கிறார்.