ETV Bharat / sitara

'பெண்கள் குறித்து நான் தவறாகப் பேசவில்லை' - இயக்குநர் பாக்யராஜ் விளக்கம் - பொள்ளாச்சி சம்பவம் குறித்து இயக்குநர் பாக்கியராஜ்

சென்னை: பெண்கள் குறித்து தான் தவறாகப் பேசவில்லை என்றும் தான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என இயக்குனர் பாக்யராஜ் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

director k bhagyaraj about pollachi women issue controversy

author img

By

Published : Dec 4, 2019, 8:13 PM IST

'திருவாளர் பஞ்சாங்கம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பின்னர் இயக்குநர் பாக்யராஜ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ' பெள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் கவனமாக இருந்தால், அச்சம்பவத்தை தவிர்த்திருக்கலாமே என்று மட்டும்தான் தான் கூறியதாகவும், ஆனால் அச்செய்தி திரித்துக் கூறப்பட்டது' என்றும் கூறினார். இதனால் தான் சின்மயி உள்ளிட்டோர், தனக்கு எதிராகப் பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய படத்திலும் நிஜவாழ்விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்த பாக்யராஜ், தான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார். சினிமாவில் உள்ளவர்கள் சிலர் தன்னிடம் தான் தவறாகப் பேசவில்லை என்று சொன்னதாகவும் பாக்யராஜ் விளக்கம் அளித்தார்.

ஆந்திர மகிளா அமைப்பு நோட்டீஸ் தொடர்பான கேள்விக்கு, அது குறித்து தனக்கு முழுமையாகத் தெரியவில்லை என்றும்; இதற்குப்பின் யார் உள்ளார்கள் எனத் தெரியவில்லை என்றும் கூறினார்.

இயக்குநர் கே. பாக்யராஜ்

பிரசாத் ஸ்டுடியோஸுடன் இளையராஜா பிரச்னை தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர் இளையராஜா விவகாரத்தில் இரண்டு மாத கால அவகாசம் கேட்டு தான் சென்றதாகவும்; மேலும் பொங்கல் வருகிறது, படங்கள் உள்ளது, இது குறித்து தான் தாங்கள் பேசியதாகவும் பிரச்னை சுமுகமாக முடியும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயம் ரவியின் தாய், தந்தை எழுதிய நூல்கள் வெளியீடு

Intro:பெண்கள் குறித்து நான் தவறாக பேசவில்லை நான் பேசிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது இயக்குனர் பாக்கியராஜ் பேட்டி.Body:திருவாளர் பஞ்சாங்கம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் கலந்து கொண்ட பின்னர் இயக்குனர் பாக்யராஜ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது
பெள்ளாச்சி விவகாரத்தில் பெண்கள் கவனமாக இருந்தால் தவிர்த்திருக்கலாமே என்று தான் கூறினேன், ஆனால் அது திரித்து கூறப்பட்டது இதனால் தான் சின்மயி உள்ளிட்டோர் எனக்கு எதிராக பேசியுள்ளனர்,
என் படத்திலும் சரி நிஜவாழ்விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன், நான் எந்த தவறு செய்யவில்லை அதனால் தான் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு கொடுத்துள்ளார்கள், சினிமாவில் உள்ளவர்கள் போனில் நீங்கள் தவறாக பேசவில்லை என்று என்னிடம் சொன்னார்கள்.
ஆந்திர மகிளா அமைப்பு நோட்டீஸ் தொடர்பான கேள்விக்கு அது குறித்து எனக்கு முழுமையாக தெரியவில்லை யார் பின்னால் உள்ளார்கள் என்று.
Conclusion:பிரசாத் ஸ்டுடியோ இளையராஜா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்
இளையராஜா விவகாரத்தில் இரண்டு மாதம் கால அவகாசம் கேட்டு தான் சென்றோம் பொங்கல் வருகிறது படங்கள் உள்ளது, இது குறித்து தான் நாங்கள் பேசினோம் சுமூகமாக முடியும் என்றார்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.