ETV Bharat / sitara

ரஜினி, கமல் தங்களை தினந்தோறும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் - வைரமுத்து பேச்சு - ரஜினி கமல்

சென்னை: பாலச்சந்தர் தமிழ் மண்ணில் விதைத்துச்சென்ற ரஜினி, கமல் ஆகிய இரண்டு விதைகளும் தங்களை தினந்தோறும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

vairamuthu
author img

By

Published : Nov 8, 2019, 12:44 PM IST

Updated : Nov 8, 2019, 12:57 PM IST

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையிலுள்ள ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவன அலுவலகத்தில், மறைந்த இயக்குநரும் தனது குருநாதருமான கே. பாலசந்தர் திருவுருவச் சிலையை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் திறந்துவைத்தார்.

இந்தச் சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், நாசர், இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய வைரமுத்து, கமல்ஹாசனுக்கு சிலைகளின் வாரம் இது. நேற்று பெற்ற தந்தைக்கு பரமக்குடியில் சிலை திறந்த கமல்ஹாசன், இன்று கற்றுத்தந்த தந்தைக்கு ஒரு சிலையை சென்னையில் திறந்துள்ளார். இரு தகப்பனுக்கும் சிலை அமைத்து நன்றிகளின் சாட்சியாக விளங்கும் கமலை வாழ்த்துகிறேன். கலை ஆசானாக பாலசந்தரை கொண்டாடியவர் கமல்.

இந்தியாவின் கலை அவதாரமாக திகழும் ரஜினியையும் கமலையும் இந்த மண்ணில் விதைத்துச் சென்றவர் பாலசந்தர்தான். அவர் விதைத்த விதை வீரியமான விதை என்பதை இவர்கள் தினந்தோறும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். பாலசந்தரின் மேல் இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதன் அடையாளம்தான் இந்தச் சிலை திறப்பு. இருவருக்கும் மத்தியில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும்.

பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் பேசிய வைரமுத்து

நான் பாலசந்தருக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டவன். நான் ஓடிக்கொண்டிருப்பதற்கு தமிழும் பாரதி ராஜாவும் பாலசந்தரும்தான் காரணம். பாலசந்தர் என்பவர் கதாசிரியர், இயக்குநர் மட்டுமல்ல அவர் தமிழின் நுட்பம் தெரிந்த ஒரு எழுத்து மேதை. அனைத்து மக்களுக்கும் பாடல்கள் புரிய வேண்டும் என்பதை அவர் என்னிடம் தெரிவித்தார்.

நான் பாலசந்தரிடம் ரஜினி, கமல் குறித்து பேசினால் அவர் இவர்கள் இருவரையும் பற்றிதான் என்னுடன் நீண்ட நேரம் உரையாற்றுவார். கலை மேதையின் சிலையை நிறுவியதற்கு வாழ்த்துகள். பாலசந்தருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம், ஆனால் இந்தச் சிலையை கமல் வைப்பதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. கற்றுக்கொடுத்தவருக்கு சிலை வைப்பதை சமூகம், உலகம் கற்றுக்கொள்ளட்டும்" என்றார்.

பின்னர் பேசிய பாலசந்தரின் மகள் புஷ்பா, இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். கமல், தனது அப்பா பாலசந்தர் ஆகிய இருவரின் உறவும் மகன் அப்பா உறவு போன்று அற்புதமானது என்ற அவர், சிலை நிறுவியதற்கு கமல்ஹாசனுக்கு நன்றியும் தெரிவித்தார்.

Intro:Kb சிலை திறப்பு விழவில் வைரமுத்து பேச்சு
Body:வைரமுத்து மேடை பேச்சுகையில்,

கமல்ஹாசனுக்கு சிலைகளின் வாரம் இது. நேற்று பெற்று தந்த தந்தைக்கு ஒரு சிலை பரமகுடியில், இன்று கற்றுத்தந்த தந்தைக்கு ஒரு சிலை சென்னையில்.இரு தகப்பனுக்கும் சிலை அமைத்து நன்றிகளின் சாட்சியாக விளங்கும் கமலை வாழ்த்துகிறேன். இது நாகரீகத்தின் முன்னேற்றம்.கலை ஆசானாக பாலசந்தரை கொண்டாடியவர் கமல்.பாலசந்தரின் மேல் 2 பேருக்கும் காதல் அதன் அடையாளம் தான் இந்த சிலை திறப்பு.

இருவருக்கும் மத்தியில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். கற்கண்டு கட்டிகள் முட்டினாலும் சர்க்கரையாக தான் இருக்கும்.

தமிழகத்திற்கு 2 பொக்கிஷங்களை கொடுத்தவர் பாலசந்தர். இந்தியாவின் கலை அவதாரமாக திகழும் கமலையும், ரஜினியையும் அறிமுகம் செய்தவர் பாலசந்தர்.
என்னால் வளர்க்கப்பட்டவர்கள் உயரமாகிவிட்டார்கள் என பாலசந்தர் ரஜினி மற்றும் கமல் பற்றி கூறினார்.

நான் பாலசந்தருக்கு வாழ் நாள் முழுவதும் கடமைப்பட்டவன். நான் ஓடிக்கொண்டிருப்பதற்கு தமிழும், பாரதி ராஜாவும், பாலசந்தரும் தான் காரணம். 2 கலை சின்னங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிறார்கள் அவர்கள் பாலசந்தரின் மடியில் வளர்ந்தவர்கள்.

கலை மேதையின் சிலையை நிறுவியதற்கு வாழ்த்துக்கள்.
பாலச்சந்தருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம், ஆனால் இந்த சிலையை கமல் வைப்பதற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. கற்றுக்கொண்டுத்தவருக்கு சிலை வைப்பதை சமூகம் மற்றும் உலகம் கற்றுக்கொள்ளட்டும்.

Conclusion:பாலசந்தர் மகள் புஷ்பா மேடை பேச்சுகையில்,

மிகவும் நெகிழ்ச்சியான தருணம். இருவரின் உறவும் அற்புதமானது. மகன் அப்பா உறவு போன்றது தான் கமல் பாலசந்தர் உறவு.
சிலை நிறுவியதற்கு கமல்ஹாசனுக்கு நன்றி என்ற உணர்ச்சி யோடு பேசினார்
Last Updated : Nov 8, 2019, 12:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.