தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் காம்போ எனக் கூறப்படும் நடிகர் சூர்யா - இயக்குநர் ஹரி ஆகியோர் ஆறாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் 'அருவா'.
இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். சூர்யா நடிக்கும் 39ஆவது படமாகவும், இயக்குநர் ஹரியின் 16ஆவது படமாகவும் உருவாகிறது. படத்திற்கு 'அருவா' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், கிராமத்துப் பின்னணியில் காதல், குடும்ப சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020ஆம் ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆனால் தற்போது கரோனா அச்சம் காரணமாக அருவா படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தொற்றால் தமிழ் திரையுலகம் கடும் பொருளதார பிரச்சனையை சந்தித்துள்ளது. இதிலிருந்து மீண்டுவருவது எப்படி என தயாரிப்பாளர்கள் ஆலோசித்துக்கொண்டிருக்கையில் இசையமைப்பாளருரம், நடிகருமான விஜய் ஆண்டனி சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்து கொள்ளுமாறு தாமாகவே முன்வந்து கூறினார். இவரின் இந்தசெயலுக்கு தயாரிப்பாளர்கள் பலர் பெரும் ஆதரவு அளித்தனர்.
இவரைத் தொடர்ந்து நடிகர் ஹரிஷ் கல்யாணும் சம்பளத்தைக் குறைத்துக்கொள்வதாக அறிவித்திருந்தார். இதனிடையே அருவா படத்தில் தனக்கான சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக இயக்குநர் ஹரி அறிவித்தார்.
-
Best gesture.. Vazthukkal director sir pic.twitter.com/BhMAiwMOfW
— manobala (@manobalam) May 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Best gesture.. Vazthukkal director sir pic.twitter.com/BhMAiwMOfW
— manobala (@manobalam) May 7, 2020Best gesture.. Vazthukkal director sir pic.twitter.com/BhMAiwMOfW
— manobala (@manobalam) May 7, 2020
இதுகுறித்து ஹரி வெளியிட்ட அறிக்கையில், "இந்த கரோனா பாதிப்பால் நம் திரையுலகம் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளது. நம்முடைய தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் நம் தொழில் மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்பும். இந்தச் சூழலை மனதில் கொண்டு, நான் அடுத்தாக இயக்கப்போகும் அருவா திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளத்தில் 25 சதவீத்தை குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரின் இந்த அறிவிப்புக்கு நடிகரும் இயக்குநருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில், நல்ல முயற்சி வாழ்த்துகள் என ட்வீட் செய்துள்ளார்.