ETV Bharat / sitara

பெரிய கோயில் நோக்கி சென்ற இயக்குநர் கவுதமன் காவல்துறையினரால் கைது!

author img

By

Published : Feb 4, 2020, 11:18 PM IST

கள்ளக்குறிச்சி: சென்னையிலிருந்து தஞ்சைப் பெருவுடையார் கோயில் நோக்கி சென்ற இயக்குநர் கவுதமனை உளுந்தூர்ப்பேட்டை சுங்கச்சாவடியில் காவல்துறையினர் தடுத்து கைது செய்துள்ளனர்.

Director Gauthaman arrested by police at Ulundurpet tollgate
பெரியக் கோயில் நோக்கி சென்ற இயக்குநர் கவுதமன் காவல்துறையினரால் கைது !

தஞ்சைப் பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவுக்காக சென்னையில் இருந்து சென்ற தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கவுதமனை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மேலிடத்தில் இருந்து உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, அவரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.

இங்கேயே விசாரணையை மேற்கொள்ளலாமே என்று இயக்குநர் கவுதமன் கூற, அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்வதாக அறிவித்தனர்.

அப்போது ஊடகங்களை சந்தித்த இயக்குநர் கவுதமன், ' உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை மீறி, தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் தமிழ் மரபுகளை மறைத்து குடமுழுக்கை நடத்தும் இந்து அறநிலைத் துறையை கண்டித்தும் தமிழில் குடமுழுக்கு செய்ய வலியுறுத்தியும், மக்கள் மத்தியில் அதற்கு ஆதரவு திரட்ட நான் கிளம்பியிருப்பதாக உளவுத் துறை தகவல் கிடைத்திருக்கிறதாம். அதனால், நான் தஞ்சை பெரிய கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னை கைது செய்வதாக கூறுகிறார்கள்.

எது எப்படியோ தமிழில் குடமுழுக்கு நடந்தே தீர வேண்டும். அப்படி மீறும் பட்சத்தில் நாங்கள் ஒருபோதும் தமிழை விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டில் எச்.ராஜா போன்றவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிராகப் பேசுவதை தமிழராகிய நாங்கள் ஒரு காலமும் இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவரைப் போன்ற தமிழர் விரோதிகளின் பேச்சு ஒரு காலமும் இங்கே எடுபடாது ' என்றார்.

பெரியகோயில் நோக்கி சென்ற இயக்குநர் கவுதமன் காவல்துறையினரால் கைது !

ஊடகங்களிடையே அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவரை காவல்துறையினர் கைது செய்து தரதரவென இழுத்து சென்றனர். இயக்குநர் கவுதமன் மற்றும் அவருடன் பயணப்பட்டிருந்த இருவரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.

திரைப்பட இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : ரஜினிகாந்தை நேரில் ஆஜராக ஆணையம் சம்மன்!

Intro:tn_vpm_02_gowthaman_arrest_vis_tn10026.mp4Body:tn_vpm_02_gowthaman_arrest_vis_tn10026.mp4Conclusion:

சென்னையிலிருந்து தஞ்சைக்கு பெரிய கோயில் நோக்கி சென்ற இயக்குனர் கவுதமனை உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போலிசார் கைது செய்தனர் !!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சென்னையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் இயக்குனருமான கௌதமன் மற்றும் அவருடன் வருகைதந்த இருவரையும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கௌதமனை போலீசார் சுற்றி வளைத்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர் சந்திப்பின்போது : - தஞ்சையில் நடைபெறும் குடமுழுக்கு தமிழ் மரபுகளை மதுரை கிளையின் உத்தரவை மீறி தமிழ் மரபுகளை மறைத்துள்ள இந்து அறநிலை துறையை கண்டித்து தமிழில் குடமுழுக்கு செய்ய ஆதரவு திரட்டி நான் தஞ்சை பெரிய கோயில் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது போலீசார் கைது செய்ததாக கூறுகிறார்கள் எது எப்படியோ தமிழில் குடமுழுக்கு நடந்தே தீர வேண்டும் அப்படி மீறும் பட்சத்தில் நாங்கள் ஒருபோதும் தமிழை விட்டுக் கொடுக்க மாட்டோம் தமிழகத்தில் எச்.ராஜா போன்றவர்கள் பேசுவதை தமிழராகிய நாங்கள் ஒரு காலமும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் அவருடைய பேச்சு தமிழகத்தில் ஒரு காலமும் எடுபடாது
இவ்வாறு பேசினார்....
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.