சென்னை: கரோனா காரணமாக திரையுலகமே மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாக பெரிய முதலீட்டுப் படங்கள் முதல் சிறிய முதலீட்டுப் படங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஓடிடியில் படங்கள் வெளியாவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வெளியாகும் படங்கள் வரவேற்பையும் பெற்றுள்ளன. இதனால் கேரள அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி மலையாள சினிமாவுக்கென பிரத்யேக ஓடிடி தளம் உருவாக்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள இயக்குநர் சேரன், தமிழ் மொழிக்கும் இதுபோன்ற ஒரு ஓடிடி தளம் உருவாக்க வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.