தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதே நாளில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 4) மாலையுடன் தேர்தல் பரப்புரை முடித்துக்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இதனையடுத்து அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பரப்புரையில் தீவிரமாக வாக்குச் சேகரித்துவருகின்றனர்.
இந்நிலையில், 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையமும் மக்களிடையே பல விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. மேலும் பிரபலங்களும் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தியும் அணைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையான வாக்குப்பதிவை முறையாகச் செய்ய வேண்டியும் தங்களது சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உழைக்கவும், உடலையும் வாழ்வையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிந்திப்பவர்கள் மட்டுமே நம் உண்மையான எதிர்காலம் பற்றி யோசிக்கிறார்கள் என அர்த்தம்.
இது வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியதே. நான் எந்தக் கட்சி சார்ந்தும் பேசவில்லை. நாம்தான் ஆள வேண்டும். வாக்களிக்க மறக்காதீர்கள்.
குடும்பத்தாருடன் அமர்ந்து பேசுங்கள். அவரவர் சார்ந்த துறைகளில் எதில் வளர்ச்சி சிக்கல் இருக்கிறது, ஏன் தீர்க்கப்படவில்லை, என்ன செய்தால் அது மாறும், யாரிடம் சரியான சிந்தனை இருக்கிறது எனக் கலந்து பேசுங்கள். இலவசமாகக் கிடைக்க வேண்டியது கல்வியும், மருத்துவமும் என்பதை நினைவுகொள்ளுங்கள்.
நினைக்கிறீர்களோ.. அதற்கான செயல்பாட்டு திட்டமும் சிந்தனையும் யாரிடம் உள்ளதோ அவர்களை தேர்ந்தெடுத்து ஓட்டுப்போடுங்கள்.. இது எக்ஸ்ட்ரா இருக்க வீட்டை வாடகைக்கு விடும் விசயம் அல்ல... இருக்கும் நம் வீட்டுக்குள் குடும்பத்தலைமயை ஒருவரிடம் ஒப்படைப்பது போல.. ஆகையால் ஒரு ஒரு மணி நேரம் 6ஆம் தேதி எலெக்ஷன்.. ஓட்டுப்போடுவது உங்கள் கடமை.. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். யார் பேச்சிற்கும் யாரோட அனுதாபியாகவும் இருந்து சிந்திக்கவேண்டாம்..இது உங்களுக்கான உரிமை, உங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் எது தேவையோ.. நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம்பெற எது சமூக மாற்றமாகனும்னு" என அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.