ETV Bharat / sitara

வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்களை கெளரவியுங்கள் - அரசுக்கு சேரன் வேண்டுகோள் - முதலமைச்சர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி

சென்னை: எழுத்தாளர்களை கெளரவிப்பது போன்று திரை எழுத்தாளர்களையும் அரசு கெளரவிக்க வேண்டுமென இயக்குநரும் நடிகருமான சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Cheran
Cheran
author img

By

Published : Jun 4, 2021, 6:01 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 98ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்த நலத்திட்ட உதவியின் ஒரு பகுதியாக, தமிழ் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மாமணி விருதும் உயர் விருதுகள் பெற்ற தமிழ்நாட்டை சார்ந்த எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விகையில், அவர்கள் வசிக்கும் மாவடத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு எழுத்தாளர்கள் மத்தியில் பொரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதேபோன்று திரை எழுத்தாளர்களையும் இயக்குநர்களையும் அரசு கெளரவிக்க வேண்டுமென இயக்குநரும் நடிகருமான சேரன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "திட்டங்கள் சிறப்பு சார். எழுத்தாளர்களை கெளரவிப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், திரைத்துறையிலும் மக்களுக்கான, சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள் திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்.

  • மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் ப்ரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

    — Cheran (@directorcheran) June 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குநர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்னைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்" என முதலமைச்சர் ஸ்டாலினின் ட்வீட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.