ETV Bharat / sitara

தமிழ் சினிமா இவரிடம் ஆட்டோகிராஃப் கேட்கும் - பிறந்தநாள் வாழ்த்துகள் சேரன்

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், சொந்த மண்ணை நேசிப்பதில் மட்டும் எந்த மாற்றமும் நிகழக்கூடாது என்ற ஒரு முக்கிய கருத்தை சேரன் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி பேசியிருந்தார்.

சேரன்
சேரன்
author img

By

Published : Dec 12, 2019, 8:31 PM IST

Updated : Dec 12, 2019, 11:44 PM IST

நம் நினைவின் அடுக்குகளிலிருந்து தொலைந்த அல்லது நாம் தொலைத்த வாழ்வியலையும், உறவுகளையும் மீண்டும் நம்மைத் தேட வைக்கும் படைப்பாளி, யதார்த்தமான படைப்பாளி. அப்படி தமிழ் சினிமா மறக்க முடியாத, மறக்கக் கூடாத படைப்பாளி சேரன்.

சேரன்
சேரன்

கோலிவுட்டின் மிகச் சிறந்த இயக்குநர்களில் சேரன் முக்கியமானவர். இவரது திரைப்படங்களை ஒருவர் ரசிக்க, உணரப் பெரிதாக மெனக்கட வேண்டியதில்லை. மனிதத்துடன் இருக்கும் சராசரி சாமானியனாக இருந்தால் போதும். ஏனெனில் சேரனின் திரைமொழி அலங்காரமற்றது. நம்மில் நிகழும் நிகழ்வுகளையும், நம்முடன் உலாவும் மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் காட்சிப்படுத்துபவர்.

அவரது திரைப்படங்கள் எப்போதும் ஒருவித மென்மையை நிகழ்த்தும், யதார்த்தத்தை நம்முள் செலுத்தும். இந்த உலகம் மாற்றுத்திறனாளிகளை ஒன்று ஒதுக்கி வைக்கும். இல்லை கருணையோடு பார்க்கும். இது இரண்டுமே மிகவும் ஆபத்தானது. மாற்றுத்திறனாளிகளின் வலியையும், வேதனையையும் 'பொற்காலம்' திரைப்படம் மூலம் சேரன் வெளிக்கொண்டு வந்தார்.

எப்போதும் நமது அருகில் இருப்பவர்களை நாம் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். 'பொற்காலம்' திரைப்படத்தில் தனது தங்கைக்கு முரளி ஊரெல்லாம் மாப்பிள்ளை தேட, அருகிலேயே இருக்கும் வடிவேலுவை அவர் கண்டுகொள்ளவே மாட்டார்.

சேரன்
சேரன்

அப்போது, ' ஏம்பா உன் தங்கச்சியை வெச்சு வாழ வக்கத்தவன்னு என்னைய எதுமே கேக்கலயா. உன் வீட்டுல மண்ணு மிதிக்க மட்டும்தான் இவன் லாயக்குனு நினைச்சியா. உன் மனசுல இருக்க ஊனத்த மாத்திக்கப்பா' என்று வடிவேலு பேசும் ஒரு காட்சியின் மூலம், உடலில் இருப்பது மட்டும் ஊனமில்லை, நமது அருகிலேயே இருப்பவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் மனமும் ஊனம் தான் என்பதை சொல்லியிருப்பார் சேரன்.

அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளியான தனது தங்கை அனுபவித்த வலி போல், வேறு ஒரு மாற்றுத் திறனாளி பெண் அனுபவிக்கக்கூடாது என்பதால், தனது காதலை ஒதுக்கிவைத்துவிட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை முரளி திருமணம் செய்துகொள்வார். மேலும் அந்தத் திருமணத்திற்கு தான் காதலித்த பெண்ணே தாலி எடுத்துக்கொடுப்பது போல் சேரன் காட்சியமைத்திருப்பார். அதுவரை தமிழ் சினிமாவில் அப்படி ஒரு க்ளைமேக்ஸ் காட்சி வந்திருக்கிறதா என்பது சந்தேகம்.

பொற்காலம்
பொற்காலம்

வெளிநாட்டு மோகம் 90களில் தழைத்தோங்கி இருந்தது. இப்போதும் அந்த மோகம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்போதைய மோகம் சிறிது விழிப்புணர்வுடன் இருக்கிறது. யாரென தெரியாதவர்களிடம் வெளிநாடு செல்ல பணம் கொடுப்பது உள்ளிட்ட செயல்கள் 90களில் உச்சத்தில் இருந்தன.

தங்களிடம் இருக்கும் நிலத்தில் சிறிது சிறிதாக உழைத்து சேமித்தது, வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்தது என தங்களது வாழ்க்கையின் உழைப்பை பணமாக மாற்றி ஏஜெண்டிடம் கொடுத்து ஏமாந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். குறிப்பாக தென் தமிழ்நாட்டில். அவர்களின் வலியையும், வேதனையையும் யதார்த்தம் குழையாமல், 'வெற்றிக்கொடிகட்டு' படம் மூலம் பேசியிருப்பார் சேரன்.

வெற்றிக்கொடிகட்டு
வெற்றிக்கொடிகட்டு

குறிப்பாக சார்லி முரளியின் வீட்டுக்கு வரும்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக நடந்துகொள்வது, அதன் பிறகு பார்த்திபனிடம் தனது குடும்பத்தின் நிலை குறித்து சார்லி வேதனையுடன் சொல்வது, மனைவியின் பிரசவத்தின் போது அருகில் இருக்க முடியாத பார்த்திபன் என அந்தத் திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் நம்மைச் சுற்றி இருக்கும் ஏமாற்றம் அடைந்தவர்களின் வலியை சொல்லிக்கொண்டே இருக்கும்.

கூட்டுக் குடும்பம்தான் ஒருவருக்கொருவர் அனுசரிப்பை சொல்லிக்கொடுக்கும், அன்பைப் பரிமாற சொல்லிக்கொடுக்கும். அந்த கூட்டுக்குடும்பம் சிதையும்போது ஒரு தலைமுறை தொலைகிறது என்று பொருள். அந்த தொலைந்த தலைமுறையின் வாழ்க்கையை வைத்து 'பாண்டவர் பூமியை' படைத்தார், சேரன்.

குடும்ப பகையால், அந்தப் பகையுடன் வரும் காதலால், அந்தக் காதல் மூலம் நிகழும் கொலையால், ஒரு குடும்பம் சொந்தக் கிராமத்தை விட்டு வேறு எங்கோ வாழ்ந்துகொண்டிருக்கும். உலகிலேயே மிகவும் ரணமான விஷயம் என்னவென்றால், தனது சொந்த ஊரைவிட்டு ஒரு குடும்பம் இடம்பெயர்வது.

பாண்டவர் பூமி
பாண்டவர் பூமி

இப்போது, பண்டிகைகளுக்குச் சொந்த ஊருக்கு செல்வதற்கே யோசிக்கும் தலைமுறையாக இருக்கிறோம். ஆனால், பாண்டவர் பூமியில் தனது அடுத்த தலைமுறை, சொந்தக் கிராமத்தில்தான் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் எங்கோ சென்ற ஓர் குடும்பம் மீண்டும் தங்களது பூமிக்கே திரும்பி வந்து, வீடு கட்டும்படி அந்தத் திரைப்படத்தை கொண்டு சென்றிருப்பார், சேரன்.

தற்போது நவீனம் என்ற பெயரில் பழமையையும், நினைவுகளையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். பழைமையை கொலை செய்யாத நவீனம் அழகு. அப்படிப்பட்ட நவீன பொறியாளன் கிடைப்பது பேரழகு. பழமையைக் கொலை செய்யாமல், நவீனத்தை ஒதுக்காமல் ஒரு பொறியாளன் பாண்டவர் பூமியில் இருந்தான். கோலிவுட் பூமிக்கு இதுவரை அப்படிப்பட்ட பொறியாளன் கிடைக்கவில்லை.

இயக்குநர் சேரன்
இயக்குநர் சேரன்

டிராக்டரை வைத்து நிலத்தை உழும்போது மனோரமா பேசும் வசனமாகட்டும், தனது ஊர்க்காரர்கள் அடுத்த ஊருக்கு வேலைக்கு செல்லுதலை தடுத்து நிறுத்துவது என சேரன், அதில் எழுதியிருக்கும் ஒவ்வொரு வசனமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் நிகழலாம். ஆனால், சொந்த மண்ணை நேசிப்பதில் மட்டும் எந்த மாற்றமும் நிகழக்கூடாது என்ற ஒரு முக்கிய கருத்தை சேரன் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி பேசியிருந்தார்.

தாயின் வலியை, தாய்மையின் புனிதத்தை தமிழ் சினிமா ஏராளமாகப் பேசிவிட்டது. ஆனால், தந்தையின் பாசத்தை, அவரின் உழைப்பைப் பெரிதாக பேசவில்லை. அப்போது அதையும் பேச வந்தார் சேரன். லோயர் மிடில் கிளாஸ் தகப்பன், தனது மகன்களுக்காக என்னென்ன வலியை அனுபவிக்கிறார் என்பதை சோகம் தொண்டையை அடைக்க 'தவமாய் தவமிருந்து' படத்தில் சொல்லியிருப்பார்.

ஒரு பண்டிகைக்குத் துணி எடுப்பதற்கு தகப்பன் படும் இன்னல், வட்டிக்குப் பணம் வாங்குவது என ஒரு லோயர் மிடில் கிளாஸ் தகப்பனின் வாழ்வியலை ரசிகர்களுக்கு அப்பட்டமாக கடத்தியிருப்பார், சேரன்.

தவமாய் தவமிருந்து முத்தையா
தவமாய் தவமிருந்து முத்தையா

மகனின் மனப்போக்கையும், அவனின் உடல் போக்கையும் அவன் சொல்லாமல் உணர்ந்து கொள்பவன் தகப்பன்சாமி. அப்படிப்பட்ட தகப்பன்சாமிதான் 'தவமாய் தவமிருந்து' முத்தையா. தனது மூத்த மகன் விலைமாதுவிடம் சென்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் அவனுக்கு உடனடியாக திருமணம் செய்துவைப்பது, தனிக்குடுத்தனம் செல்ல மூத்தவன் எத்தனிக்கும்போது, '' வந்த பொண்ணுக்கு நம்ம வாழ்க்கை தெரியாது. வளர்ந்தவன் தான் எடுத்துச் சொல்லணும்” என்று முத்தையா சொல்லும் காட்சி என அந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத வாழ்வியல் உதாரணம்.

தவமாய் தவமிருந்து
தவமாய் தவமிருந்து

முக்கியமாக, மூத்த மகன் தன்னை விட்டுப் போக, இளைய மகனும் தன்னிடம் சொல்லாமல் சென்னையில் காதலியை மணம் முடித்து குழந்தையுடன் இருக்கும்போது, தனது கடமையைத் தேடிவந்து தீர்த்துவிட்டு செல்லும் காட்சியில் தந்தையை மதிக்காத ஒவ்வொருவரும் குற்ற உணர்ச்சியில் குறுகினார்கள். ஒரு குடும்பத்திற்கு 'மருமகள்' என்ற பெயரில் வரும் மகள் முக்கியமானவள். தனது துணையை மட்டுமின்றி, தனது துணையை ஆணாக மாற்றிய தந்தை, தாயையும் அவள் பக்குவத்தோடு வாழ்க்கை முழுவதும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்படிப்பட்ட மருமகள்தான் 'தவமாய் தவமிருந்து' படத்தில் வரும் சேரனின் மனைவி. அப்படிப்பட்ட மருமகள்களுக்குத்தான் அனைவரும் தவமாய் தவமிருக்கிறார்கள்.

தவமாய் தவமிருந்து பெற்ற மகள்
தவமாய் தவமிருந்து பெற்ற மகள்

காதல் என்பது அரிதான அற்புதம் கிடையாது. அது ஒரு நிகழ்வு அவ்வளவே. காதல் ஒருமுறைதான் பூக்கும் என்ற எந்த விதியும் கிடையாது. அப்படி யாரேனும் நினைத்தால் அவர்கள் காதலை யதார்த்தத்தோடு அணுகவில்லை என்று அர்த்தம். காதல் எத்தனை முறை வேண்டுமானாலும் வரும்.

பள்ளிப்பருவ காதல், கல்லூரிப் பருவ காதல் என்று காதலுக்கு பல அடுக்குகள் இருக்கின்றன. அந்த அடுக்குகளில் காதலிப்பவன் உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அந்த உண்மையை ஆட்டோகிராஃப் போட்டு கோலிவுட்டுக்கு கொடுத்தார், சேரன்.

ஆட்டோகிராஃப்
ஆட்டோகிராஃப்

ஆணின் வாழ்க்கையில் காதலி எவ்வளவு முக்கியமோ அந்தளவு முக்கியம் தோழி. ஆணும், பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கொள்ள முடியுமா என்று பாண்டவர் பூமியில் பாடல் மூலம் கேள்வி கேட்ட சேரன், பழகிக்கொள்ள முடியும் என்று ஆட்டோகிராஃபில் பதில் சொன்னார். ஆட்டோகிராஃபில் வரும் சினேகாவின் கதாபாத்திரம் மிக மிக முக்கியமானது.

'திறமை இருந்தும் முன்னேறாத ஆம்பளைங்க இருக்குறது... ஆயிரக்கணக்கான இசைகள உருவாக்குற பியானோவ, ஹாலுல அழகுக்காக தூசி படிய போட்ட மாதிரி' என்று சினேகா பேசும் வசனம் ஒரு ஆணுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை உசுப்பிவிடும்.

ஆட்டோகிராஃப்
ஆட்டோகிராஃப்

நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்குச் சென்றால், எந்தவிதமான பரிசுப்பொருட்களும் வாங்கி செல்ல மனம் யோசிக்காது. அதேபோல்தான் சேரனின் திருமணத்திற்குச் செல்லும் சினேகாவிடம், 'என்ன வெறும் கையோடு வந்திருக்க கிஃப்ட்லாம் எதும் இல்லயா' என்று சேரன் கேட்கும் இடம் யதார்த்தத்தின் உச்சம்.

ஒரு படைப்பாளி தனது படைப்புடன் ரசிகர்களை கனெக்ட் செய்வது முக்கியம். ஆனால், திருமணத்திற்கு பத்திரிகை வைக்கச் செல்லும்போது ரசிகர்களுக்கு பத்திரிகை வைப்பது, படத்தின் முடிவில் எனது கல்யாணத்திற்கு வந்ததற்கு நன்றி என சொல்வது என இந்தத் திரைப்படத்துடன் ரசிகர்களை அவ்வளவு யதார்த்தமாக கனெக்ட் செய்திருப்பார் இயக்குநர். இப்படி இதுவரை யாரும் ரசிகர்களை கனெக்ட் செய்ததில்லை.

சேரன்
சேரன்

யதார்த்த இயக்குநர்கள் பலர் தமிழ் சினிமாவில் இருக்கலாம். ஆனால், யதார்த்தத்தின் உச்சத்தை எந்த ஆர்ப்பாட்டமுமின்றி காண்பிக்கும் இவரிடம்தான் தமிழ் சினிமா எப்போதும் ஆட்டோகிராஃப் கேட்டுக்கொண்டு இருக்கும். பிறந்தநாள் வாழ்த்துகள் சேரன்..

இதையும் படிங்க: HappyBirthdaySuperstar: இது ரஜினி சார் உரசாதிங்க!

Intro:Body:

Cheran 

Conclusion:
Last Updated : Dec 12, 2019, 11:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.