சென்னை: நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இதனிடையே அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. அந்த வகையில், கமல் ஹாசன், வைகோ, வடிவேலு, மகேஷ் பாபு, அருண் விஜய், சத்யராஜ், நடிகைகள் த்ரிஷா, குஷ்பு, மீனா உள்ளிட்ட பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதுகுறித்து, இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், காலத்தின் நாயகர்களே விரைந்து வருக இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது.
நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன். 'கலிங்கப்பட்டியின் சிங்கம்' தலைவர் வைகோவும், என் 'தென்கிழக்குச்சீமை' இயக்குனர் பாரதிராஜாவும் தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர்கள் பெயர் அளவிற்குத்தான் ஆட்சித் தலைவர்கள் - வைகோ