ETV Bharat / sitara

"குடிமகன்" திரைப்படத்தை பாராட்டிய பாக்யராஜ்! - பாராட்டிய

சென்னை: சத்தீஷ்வரன் தயாரித்து, இயக்கிய "குடிமகன்" திரைப்படத்தை நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

"குடிமகன்" திரைப்படத்தை பாராட்டிய பாக்யராஜ்!
author img

By

Published : Apr 10, 2019, 4:53 PM IST

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் ஜெய்குமார், ‘ஈரநிலம்’ ஜெனிபர் , சமூக செயற்பாட்டாளர் மாஸ்டர் ஆகாஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக தாங்கி வெளிவந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பாக்யராஜ் கூறுகையில், ‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி.

படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி என்றார். குடி பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று ஒரு குடும்பத்தை வைத்து சொல்லியிருப்பதும், ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை அப்படியே படமாக இயக்கி இருப்பதும் பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நம்பிக்கைக்கு ஏற்றார்போல் எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது, இவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"குடிமகன்" திரைப்படத்தை பாராட்டிய பாக்யராஜ்.

ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் இதில் ஜெய்குமார், ‘ஈரநிலம்’ ஜெனிபர்  இவர்களுடன் சமூக செயற்பாட்டாளர் மாஸ்டர் ஆகாஷ் ஆகியோர் நடிப்பில்.
வெளியான படம் ‘குடிமகன்’. 

“குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக கருத்தினைத் தாங்கி வெளிவந்த 
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ்,  படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர் பாக்யராஜ் கூறுகையில்,  

 ‘குடிமகன்’ திரைப்படம் மூன்று வெற்றி அடைந்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடி பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று ஒரு குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார். இயக்குனர் சத்தீஷ்வரன் ஸ்கிரிப்ட் மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார்போல் எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது இவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.