ETV Bharat / sitara

'இன்ஷா அல்லாஹ்' மனிதநேயத்தைப் போதிக்கிறது - பாக்யராஜ் பாராட்டு - விருது வாங்கிய இன்ஷா அல்லாஹ்

திரை உலகிற்கும், உண்மையான வாழ்க்கை நடைமுறைக்கும் 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படம் மூலம் ஒரு சீரிய திருப்பணியைச் செய்துள்ளது பாராட்டுக்குரியது என இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

baghyaraj
baghyaraj
author img

By

Published : Oct 13, 2021, 1:50 PM IST

சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இன்ஷா அல்லாஹ்'. இப்படத்தை சாகுல் ஹமீது, கோவை இப்ராஹிம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நல்ல கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ஒன்பது பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது.

'இன்ஷா அல்லாஹ்' படத்தைப் பார்த்த இயக்குநர் பாக்யராஜ், அப்படக் குழுவினரை வெகுவாகப் பாராட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மனித நேயத்தைப் பின்பற்றும் எம்மதத்தவரும் இறை மார்க்கத்தின் வழி நடப்பவரே.

மற்றவர் மனிதன் என்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார். கோவையில் தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு இஸ்லாமிய ட்ரஸ்ட் எப்படி மனிதநேயத்துடன் செயல்படுகிறது என்பதை ' இன்ஷா அல்லாஹ் ' படம் போதிக்கிறது.

கணவனால் கைவிடப்படும் எந்த மதப்பெண்மணிக்கும் இந்த ட்ரஸ்ட்டினர் அடைக்கலம் தந்து உதவுவதைப் பாராட்டலாம். படக்கதையில் மதம் மாறித் திருமணம் செய்துகொண்ட ஒரு காதல் இளம்ஜோடியை, இறுதிவரை எதைக்கொண்டும் பிரிக்க இயலாது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

'இல்லறமே நல்லறம்' என்பதை படத்தில் வரும் ஒரு முதிய தம்பதியரின் பாத்திரப் படைப்பு உயிரூட்டுகிறது. படத்தின் அனைத்து டெக்னீசியன்கள், நடிக-நடிகையரும் தத்ரூபமாக வாழ்ந்துள்ளனர்.

இயக்குநர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன், தயாரிப்பாளர்கள் சாகுல் ஹாமீது, கோவை இப்ராஹிம் ஆகியோர் திரை உலகிற்கும், உண்மையான வாழ்க்கை நடைமுறைக்கும் இத்திரைப்படம் மூலம் ஒரு சீரிய திருப்பணியைச் செய்துள்ளது பாராட்டுக்குரியது; பெருமைக்குரியது! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்" என்று பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜின் இந்தப் பாராட்டிற்கு 'இன்ஷா அல்லாஹ்' பட இயக்குநர் பாஸ்கரன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, "திரைக்கதை மன்னர் கே. பாக்யராஜ் 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படத்தைப் பார்த்து ரசித்து ஒரு பாராட்டுப் பத்திரத்தை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே 'இன்ஷா அல்லாஹ்' திரைப்படத்திற்கு ஒன்பது பன்னாட்டு விருதுகள் கிடைத்துள்ளன.

அவற்றைவிட கே. பாக்யராஜின் பாராட்டு தலையாய விருது என அக மகிழ்கிறேன். அவரது பாராட்டை இன்ஷா அல்லாஹ் திரைப்படக் குழுவினர் அனைவரும் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: வரி கட்டும் நடிகர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்கலாம் - பாக்யராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.