விக்ரம் பிரபு நடித்த 'அரிமா நம்பி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். இதனைத்தொடர்ந்து, இவர் விக்ரம் நடிப்பில் உருவான 'இருமுகன்' படத்தை இயக்கினார். இப்படம் 100 கோடி வசூல் செய்து பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதனைத்தொடர்ந்து 'நோட்டா' படத்தை இயக்கினார். முன்னதாக இவர் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
![ஆனந்த் சங்கர் -விக்ரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3833437_nambi.jpg)
இந்நிலையில், இவருக்கும் திவ்யங்கா என்ற பெண்ணிற்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் தம்பி ராமையா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது இவரது திருமண புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.