ETV Bharat / sitara

சூர்யாவுக்கு யாரும் ஆதரவு தரவில்லை: இயக்குநர் அமீர் ஆவேசம்

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா குறித்து பேசிய நடிகர் சூர்யாவுக்கு திரையுலகினர் யாருமே ஆதரவு தரவில்லை என்று இயக்குநர் அமீர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

amir
amir
author img

By

Published : Jul 7, 2021, 3:56 PM IST

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா 2019ஆம் ஆண்டு பிப்ரவர் 12ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது எழுந்த எதிர்ப்பையடுத்து நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. கடந்தாண்டு மார்ச் மாதம் நிலைக்குழு அறிக்கையை சமர்ப்பித்தது. தற்போது மீண்டும் 2021இல் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த சட்ட திருத்தப் படி ஒரு முறை தணிக்கைக்கு உள்ளான படங்களுக்கு மீண்டும் தணிக்கை செய்ய கோர முடியும். மேலும் திரைப்பட திருட்டுகளுக்கு கடுமையான சிறை தண்டனை, அபராதம் ஆகியவை விதிக்கப்படவுள்ளன. இந்த மசோதாவை எதிர்த்து கடந்த சில நாள்களாக திரைப்படத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்டோரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரைப்பட கலைஞர்கள் இணைய வழியில் ஆலோசனை நடத்தினர். இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், ராஜசேகர், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எஸ்ஆர்.பிரபு, சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அமீர் பேசியபோது, ”எதுக்காக இந்த மீட்? யார் யாரிடம் இது குறித்து விழிப்புணர்வு செய்தீர்கள்? நாடு தழுவிய படைப்பாளிகளை இணைக்க வழி இல்லையா? இதை எல்லாம் செய்ய யாருமில்லை. முன்னணி நடிகர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை.

ஒளிப்பதிவு சட்ட திருத்தம் குறித்து பேசிய சூர்யாவுக்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனை திரையுலகினர் யாருமே எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

amir
இயக்குநர் பாரதிராஜா

இவரைத்தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், தமிழ் படைப்பாளிக்கென ஒரு கவுன்சில் இல்லை. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

இதையும் படிங்க: ஒளிப்பதிவு வரைவு மசோதாவை திரும்ப பெறுக - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.