ETV Bharat / sitara

ஆதரவற்ற குழந்தைகளை 'தர்பார்' படத்திற்கு அழைத்துச் சென்ற ரஜினி ரசிகர்கள்

author img

By

Published : Jan 22, 2020, 6:38 AM IST

ஆதரவற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக 'தர்பார்' படத்துக்கு அழைத்து சென்றுள்ளனர் திண்டுக்கல் மாநகர ரஜினி ரசிகர் மன்றத்தினர்.

Dindigul Rajini fans club arranged free show of Darbar movie
Rajinikanth in Darbar movie

திண்டுக்கல்: ஆதரவற்ற குழந்தைகள், முதியவர்களை இலவசமாக 'தர்பார்' படம் பார்க்க அழைத்துச் சென்றுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ள கார்னிவல் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் 'தர்பார்' திரைப்படத்திற்கு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களை ரஜினி ரசிகர் மன்றத்தினர் அழைத்துச சென்றனர். மாநகர ரஜினி மன்ற துணைச் செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 150க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் தர்பார் படத்தை பார்த்து ரசித்தனர்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் டிசம்பர் 12ஆம் தேதி ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ரஜினியின் 'தர்பார்' படத்தை பார்க்க அவர்கள் விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தற்போது அந்தக் குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

Intro:திண்டுக்கல் 21.01.20

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளை இலவசமாக தர்பார் படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Body:டிசம்பர் மாதம் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்பொழுது குழந்தைகள் ரஜினி படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் இன்று ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்கள் 150 க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்து திண்டுக்கல் கார்னிவல் திரையரங்கில் ரஜினி நடித்த தர்பார்படத்திற்கு பேருந்தில் அழைத்து வந்து மாலை காட்சியை இலவசமாக பார்க்க வைத்தனர். திண்டுக்கல் மாநகர ரஜினி மன்ற துணை செயலாளர் சிதம்பரம் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.