'மஸ்திசாதே’, ‘சத்யமேவ ஜெயதே’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மிலாப் சாவெரி, ‘மர்ஜாவான்’ (#Marjaavaan) என்னும் மரண மாஸான படத்தை எடுத்திருக்கிறார். சித்தார்த் மல்ஹோத்ரா, ரித்தேஷ் தேஷ்முக், தாரா சுடாரியா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள முழுநீள மசாலா என்டர்டெயினர் ‘மர்ஜாவான்’.
இப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில், ஹீரோ வில்லனின் அடியாள்களை இரண்டு கிலோ மீட்டர் பறக்கும்படி அடிப்பது, முதுகெலும்பை உடைப்பது என அதிரடி காட்டியுள்ளார். கூடவே தமிழில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் பின்னணி இசையும் இடம்பெற்றுள்ளது.
-
Totally Not aware of the #Viswasam Bgm score used in the hindi trailer #Marjaavan No prior notification from the production house nor the audio label
— D.IMMAN (@immancomposer) September 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Totally Not aware of the #Viswasam Bgm score used in the hindi trailer #Marjaavan No prior notification from the production house nor the audio label
— D.IMMAN (@immancomposer) September 26, 2019Totally Not aware of the #Viswasam Bgm score used in the hindi trailer #Marjaavan No prior notification from the production house nor the audio label
— D.IMMAN (@immancomposer) September 26, 2019
இந்நிலையில், இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை மார்ஜாவான் படத்தின் ட்ரெய்லரில் யூஸ் பண்ணிட்டாங்க. இது குறித்து தயாரிப்பு தரப்பிலிருந்தும் இசை நிறுவனத்திடமிருந்தும் எந்தத் தகவலும் இல்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: #Marjaavaan டிரெய்லர் - இந்தி படமா இது, சொல்லவேயில்ல!