நடிகர் அரவிந்த் சாமி, தனது முதல் படமான 'தளபதி'-யில் ரஜினிக்கும், மம்மூட்டிக்கும் எதிரான கதாபாத்திரத்தில் நடிக்கும்போதே அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் அமைந்தது.
இதைத்தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பெற்றிருந்தார் அரவிந்த் சாமி. அதன் பின்னர் அவரே சினிமாவை விட்டு சில காலம் தள்ளியிருந்தார்.
மீண்டும் ஒரு மாஸ் வில்லன் என சொல்லும் அளவுக்கு 'தனி ஒருவன்' திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின்னர் அடுத்தடுத்து படங்களில் நடித்த அரவிந்த் சாமி, தற்போது மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' திரைப்படத்தில் எம்.ஜி. ஆர் பாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இயக்குநர் வினோத் இயக்கத்தில் 'தல 60' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருந்த அரவிந்த் சாமி, 'தலைவி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் காரணத்தினால் அஜித்துடன் நடிக்கமுடியாது என்று பணிவாக கூறிவிட்டாராம். பல நடிகர்களும் அஜித்துடன் நடிக்க ஆர்வம் காட்டும் நிலையில், அரவிந்த் சாமி அந்த வாய்ப்பை மறுத்தது, ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ‘தி டார்க் நைட்’ சாதனையை கடந்த ஜோக்கர்