ETV Bharat / sitara

’துருவங்கள் 16’ ரகுமானின் அடுத்த த்ரில்லர் படம் ஆபரேஷன் அரபைமா! - சஸ்பென்ஸ் த்ரில்லர்

’துருவங்கள் 16’ படத்திற்குப் பின் நடிகர் ரகுமான், புதுமுக இயக்குநர் ப்ராஸ் இயக்கத்தில் “ஆபரேஷன் அரபைமா” என்ற த்ரில்லர் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

Operation Arapaima
author img

By

Published : Aug 6, 2019, 5:21 AM IST

’துருவங்கள் 16’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “ஆபரேஷன் அரபைமா”. பிரபல இயக்குநர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். இவர் தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உட்பட பல மொழிப் படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். மேலும், இவர் இந்திய பாதுகாப்பு படையில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவராவர் .

Operation Arapaima
ரகுமானுடன் இயக்குநர் ப்ராஸ்

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில், “ நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அலுவலரின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன்.

Operation Arapaima
“நாடோடிகள்” அபிநயா

இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது மிகப்பெரிய பலம். ரகுமான் நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் . “நாடோடிகள்” அபிநயா படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில்நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது.”, எனக் கூறினார்.

Intro:நடிகர் ரகுமான் நடிக்கும் அதிரடி படம்“ஆபரேஷன் அரபைமா”
(Operation Arapaima)Body:துருவங்கள் 16 படத்தின் மிக வெற்றிக்குப் பிறகு ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “ஆபரேஷன் அரபைமா”.

பிரபல இயக்குனர்கள் டி.கே.ராஜிவ்குமார் மற்றும் அரண் படத்தின் இயக்குநர் மேஜர் ரவி ஆகியோரிடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றிய ப்ராஷ் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி படங்களில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் இப்படத்தின் இயக்குநர், ப்ராஷ், இந்திய இராணுவத்தில் அட்வெஞ்சர் பைலட்டாக பணி புரிந்தவர் .

டைம் அண்ட் டைடு ப்ரேம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும், இப்படத்தைப் பற்றி இயக்குநர் ப்ராஷ் கூறுகையில்,

நேர்மையும் துணிச்சலும் கொண்ட ஒரு கடற்படை அதிகாரியின் கதையை கருவாகக் கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் இது, சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறேன். இந்தப் படத்திற்கு கதையின் நாயகனாக ரகுமான் கிடைத்தது பெரிய பலம். நான் கற்பனை செய்து வைத்திருந்த கதாபாத்திரத்தை அச்சு அசலாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார் ரகுமான். கதையின் நாயகியாக “நாடோடிகள்” அபிநயா நடித்திருக்கிறார்.
Conclusion:தமிழ், தெலுங்கு இருமொழிகளில் மிகுந்த பொருட்செலவில் நவீன தொழில் நுட்பங்களுடன் வேகமாக உருவாகி வருகிறது, “ஆபரேஷன் அரபைமா”.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.