நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் விக்ரமுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதே போன்று ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கும் இந்திய கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனிக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் விளம்பர படப்பிடிப்பின் போது தோனி - விக்ரம் இருவரும் சென்னையில் சந்தித்துள்ளனர். அப்போது அந்த சிறப்பு தருணத்தில் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
விக்ரம் - தோனி சந்திப்பு இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து தோனி - விக்ரம் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக சென்னையில் ஒரே விளம்பர படப்பிடிப்புதளத்தில் விஜய் - தோனி சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது 'மஹான்', 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்', 'சியான் 61' ஆகியப் படங்களை கைவசம் வைத்துள்ளார் விக்ரம். இதில் மஹான் அமேசான் பிரைமில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
முன்பு ஒரு நேர்காணலில் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி என விக்ரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஷ்ணு விஷாலின் 'எஃப்.ஐ.ஆர்.' ரிலீஸ் தேதி அறிவிப்பு