சென்னை: கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே தனுஷ் நடித்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று (ஏப். 9) வெளியாகியுள்ளது.
கர்ணன் ரிலீஸ்
தனுஷ் - மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தை கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் படம் வெளியாகியுள்ள நிலையில், படம் ரிலீஸ் குறித்து நேற்று முதலே நடிகர் தனுஷின் ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கிவருகின்றனர்.
தயாரிப்பாளர் உறுதி
கரோனா இரண்டாம் அலை தமிழ்நாட்டில் தீவிரமாகியுள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதில் திரையரங்கில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதனால் கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும்.
#Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவைத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என வேண்டுகோள்விடுத்து படத்தின் ரிலீஸை உறுதிசெய்தார் தயாரிப்பாளர் தாணு.
அத்துடன் படத்தின் முதல் காட்சியை சென்னையிலுள்ள ரோஹிணி திரையரங்கில் ரசிகர்களோடு இணைந்து பார்த்துள்ளார்.
குறைவான ரசிகர்களே வருகை
தமிழ்நாடு அரசு விதித்த புதிய கட்டுப்பாடுகள் நாளைமுதல் (ஏப். 10) நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், இன்று திரையரங்கில் 100 விழுக்காடு பார்வையாளர்கள் பார்க்கலாம். ஆனால் முதல் காட்சியில் சென்னையிலுள்ள பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இல்லாமல் மிகக் குறைந்த அளவே ரசிகர்கள் படம் பார்த்துள்ளனர்.
தனுஷ் படங்களுக்கு கல்லூரி செல்லும் மாணவர்கள், இளம் வயதினரிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் படத்திற்கான ஓபனிங்கும் பிரமாண்டமாக அமையும்.
ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்ணன் திரைப்படத்துக்கு கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் அடுத்தடுத்த காட்சிகளில் டிக்கெட் முன்பதிவு அதிகமாகிவருவதாகக் கூறப்படுகிறது.
நடுக்கடலில் கர்ணனுக்குப் பேனர்
கர்ணன் படம் ரலீஸ் தொடர்பாக இணையத்தில் ட்ரெண்டாக்கி தனுஷ் ரசிகர்கள் தெறிக்கவிட்டனர். அத்துடன் கர்ணன் படத்தின் புகைப்படங்களையும் அதிகமாகப் பகிர்ந்தனர். இதில் ஒருபடி மேல சென்று புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலில் படத்தின் பேனரை வைத்து அமர்களப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள காந்தி சிலை பின்புறம் அமைந்திருக்கும் பிரெஞ்சு கால பழைய துறைமுகத்தில் இருக்கும் சேதமடைந்த தூண்களில் கர்ணன் பேனரை நிறுவியுள்ளனர்.
ரசிகர்களைக் கவர்ந்த டீசர், பாடல்
கர்ணன் படத்திலிருந்து முதலாவதாக 'கண்டா வரச் சொல்லுங்க' என்ற பாடல் வெளியானது. ரசிகர்களின் மனங்களைப் பெரிதும் இந்தப் பாடல் கவர்ந்த நிலையில், கண்டா வரச் சொல்லுங்க என்ற வார்த்தையை வைத்து பல்வேறுவிதமான மீமஸ்கள் பகிரப்பட்டன.
இந்தப் பாடலைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவா பாடிய 'பண்டாரத்தி புராணம்' என்ற பாடல் வெளியிடப்பட்டது. பண்டாரத்தி என்று சொல் குறிப்பிட்ட சமூகத்தைக் குறிப்பிடுவதாகச் சர்ச்சை எழுந்த நிலையில், இப்பாடல் பின்னர் 'மஞ்சனத்தி புராணம்' என்று மாற்றப்பட்டது.
இந்தப் பாடல்களைத் தொடர்ந்து 'தட்டான் தட்டான்', 'உட்ராதிங்க யப்போ' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. கடைசியாக வெளியான டீசர் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் பலர் கருத்துத் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தனுஷ்
'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். இருந்தபோதிலும் கர்ணன் குறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தொடர்ந்து அப்டேட் செய்துவந்த அவர், படத்தின் ரிலீஸை முன்னிட்டு இன்றிலிருந்து கர்ணன் என்று குறிப்பிட்டு படத்தின் போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
குவியும் பாராட்டு
கர்ணன் படத்தைப் பார்த்துள்ள இணையவாசிகள் பலர் படத்தை வெகுவாகப் பாராட்டி தங்களது கருத்தைப் பகிர்ந்துவருகின்றனர். குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் கதை சொன்ன பாணி, தனுஷ் நடிப்பு குறித்து தங்களது பாராட்டுகளை வெளிப்படுத்திவருகின்றனர். கண்டிப்பாகத் தவறாமல் அனைத்துத் தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்றும் கூறுகின்றனர்.
-
#Karnan is an epic film from the duo of @dhanushkraja & @mari_selvaraj. The way @mari_selvaraj shapes the story is highly laudable, #Karnan is not prachtige but hard hitting. Thank you @dhanushkraja & @mari_selvaraj sir for this gem.
— Prakash D (@Prakashonline_) April 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Karnan is an epic film from the duo of @dhanushkraja & @mari_selvaraj. The way @mari_selvaraj shapes the story is highly laudable, #Karnan is not prachtige but hard hitting. Thank you @dhanushkraja & @mari_selvaraj sir for this gem.
— Prakash D (@Prakashonline_) April 9, 2021#Karnan is an epic film from the duo of @dhanushkraja & @mari_selvaraj. The way @mari_selvaraj shapes the story is highly laudable, #Karnan is not prachtige but hard hitting. Thank you @dhanushkraja & @mari_selvaraj sir for this gem.
— Prakash D (@Prakashonline_) April 9, 2021
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகும் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 'யுவரத்னா'