கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அமலில் இருக்கும் ஊரடங்கால், கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடிகர்கள், நடிகைகள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வப்போது வீட்டில் தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்த் திரையுலகில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் தனுஷ் ஊரடங்கு காலம் முழுவதும் தனது குடும்பத்தினருடன் செலவு செய்து வருகிறார்.
அந்தவகையில் தனுஷ் தனது வீட்டின் மொட்டை மாடியில், தனது இரண்டு மகன்களுடன் விளையாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு மகன் அவரது முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பது போன்றும், இன்னொரு மகன் அவரது எதிரில் இருப்பது போன்றும் உள்ளது. அப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது.