'ஷமிதாப்' படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பாலிவுட்டில் 'அட்ராங்கி ரே' படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகும் இதில் சாரா அலிகான் கதாநாயகியாக நடிக்க, அக்ஷய் குமார் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து சினிமா படப்பிடிப்பு நடத்திக்கொள்ள மத்திய அரசு, அனுமதி அளித்ததால் ஆறு மாதத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த பல படங்களின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 'அட்ராங்கி ரே' படமானது மீண்டும் இன்று(அக்.06) முதல் மதுரையில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்திற்கு வெளியாகும் என்று தெரிய வருகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல்கள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'டோன்ட் வொரி ஐம் ஃபைன்' - ஸ்டேட்மெண்ட் வெளியிட்ட தமன்னா!