ETV Bharat / sitara

#D40: பிரிட்டிஷ் மண்ணில் தொடங்கிய தனுஷின் புதிய படம்! - சந்தோஷ் நாரயணன்

தனுஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

dhanush
author img

By

Published : Sep 4, 2019, 5:42 PM IST

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்திலும், துரை செந்தில்குமார் இயக்கத்திலும் நடித்துவருகிறார். இதுதவிர மாரி செல்வராஜின் இயக்கத்திலும், ராம்குமார் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதில் 'அசுரன்' அக்டோபர் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஒப்பந்தமாகியுள்ளார். அதே போல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார். அதே போல் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காம்ஸ்மோ நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் படப்பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஒரே கட்டத்தில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

Game of Thrones star James Cosmo joins Dhanush and Karthik Subbaraj - Dhanush 40

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.