ETV Bharat / sitara

'ஜகமே தந்திரம்' - தனுஷின் குத்தாட்டத்துடன் 'ரகிட ரகிட' வெளியீடு! - ஜகமே தந்திரம் ஃபர்ஸ்ட் சென்ட்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ரகிட ரகிட' தற்போது வெளியாகியுள்ளது.

தனுஷ்
தனுஷ்
author img

By

Published : Jul 28, 2020, 12:01 PM IST

ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படமான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் நிறைவடைந்த நிலையில், மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப்போனது.

இன்று (ஜூலை 28) தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் தனுஷுக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் #HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளமான டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படக்குழு ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'ரகிட ரகிட' லிரிக்கல் வீடியோவை வெளியிட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், தனுஷ், சந்தோஷ் நாராயணன் பாடிய பாடல் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.