ETV Bharat / sitara

'காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்' - 'கர்ணன்' 2ஆவது பாடல் வெளியீடு! - பண்டாரத்தி புராணம்

சென்னை: தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தின் இரண்டாவது பாடலான 'பண்டாரத்தி புராணம்' வெளியாகியுள்ளது.

karnan
karnan
author img

By

Published : Mar 2, 2021, 7:19 PM IST

'பரியேறும் பெருமாள்' படத்தை அடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிப்பில் 'கர்ணன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை 'வி கிரியேஷன்ஸ்' மூலம் தாணு தயாரித்துள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், நட்டி என்கிற நடராஜன், யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலியைச் சுற்றியுள்ள ஊர்களில் பிரமாண்டமான செட் போடப்பட்டு நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் தற்போது இறுதிகட்ட பணிகளில் இறங்கியுள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் படத்தைத் திரையிட படக்குழுவினர் முடிவுசெய்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'கண்டா வரச்சொல்லுங்க' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்பாடலை நாட்டுப்புறப் பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடியிருந்தார். இந்நிலையில், இன்று இப்படத்தின் இரண்டாவது பாடலான 'பண்டாரத்தி புராணம்' பாடல் வெளியாகியுள்ளது.

யுகபாரதி எழுதிய இப்பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார். மரண வீட்டில் மனைவியின் இறப்பைத் தாங்க முடியாமல் முதியவர் பாட சாண்டி மாஸ்டரின் கோரியோ கிராப்பில் தனுஷ் குத்தாட்டம் ஆடியுள்ளார். 'காதலே பிரபஞ்ச மாடத்தின் வெளிச்சம்' என இப்பாட்டின் இறுதியில் இடம்பெறுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.