'அசுரன்' வெற்றிக்கு பின் தனுஷ் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'டி 40' படத்திலும், இயக்குநர் துரை செந்தில் இயக்கத்தில் 'பட்டாஸ்' படத்திலும் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பில் வெகு நாட்களாக திரைக்கு வர காத்திருந்த 'எனை நோக்கி பாயும் தோட்டா' நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படி பிஸியாக இருக்கும் தனுஷ் தனது குடும்பத்தினருக்கு அவ்வப்போது பரிசு பொருட்களை வாங்கி அவர்களை வியப்பில் ஆழ்த்துவார். தற்போது அதே போன்று தனது அண்ணன் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலிக்கு 'the hunting party', 'the silence of the girls' என்னும் இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கியுள்ளார்.
இது குறித்து கீதாஞ்சலி தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையவர்கள் அனைவரும் இந்த புத்தகங்கள் கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பர். நான் இப்போது அதே உணர்வில்தான் இருக்கிறேன், நன்றி தனுஷ் என்று பதிவிட்டுள்ளார்.