தமிழில் வெளிவந்த 'யார் இவன்' படத்தில் நடித்திருந்த ஈசா குப்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'தனக்கு ஹோட்டலில் நேர்ந்த அனுபவம்' என்று பதிவிட்டிருந்தார்.
அப்பதிவில், ரோகித் என்னும் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தன்னை தொடவில்லை; தன்னிடம் பேசவில்லை என்றாலும் வைத்தகண் வாங்காமல் பார்த்தது தனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக ஈசா குப்தா தெரிவித்தார். அந்த நேரத்தில் தான் செய்யப்படுவதாகவே உணர்ந்தேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் அப்பதிவில் பெண்களுக்கான பாதுகாப்பு எங்கே இருக்கிறது? என்றும் பெண்ணாய் பிறப்பது சாபம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் ரோகித், நடிகை ஈசா குப்தா மீது மான நஷ்ட வழக்கு போட்டுள்ளர் .
அதில் நடிகை ஈசா குப்தா தன் மீது தேவையற்ற அவதூறுகளை சுமத்துகிறார் என்றும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.