ETV Bharat / sitara

‘கணவர்களின் கனவுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க இது 1983 அல்ல’ - தீபிகாவை கண்டிக்கும் நெட்டிசன்கள்!

நடிகை தீபிகா படுகோன் 83 திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் குறித்த புகைப்படம் மற்றும் கருத்தை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், பெண்கள் குறித்த தீபிகாவின் கருத்திற்கு நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பைப் பகிர்ந்து வருகின்றனர்.

83 திரைப்படம்
83 திரைப்படம்
author img

By

Published : Feb 25, 2020, 10:01 AM IST

1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டும், கபில் தேவ் தலைமையிலான அணி மேற்கொண்ட பயணத்தை அடிப்படையாகக் கொண்டும் உருவாகிவரும் திரைப்படம் ’83’

கபீர் கான் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் ரன்வீர் சிங் கபில் தேவாக நடித்துவரும் நிலையில், கபில் தேவின் மனைவி ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன் தோன்றும் புகைப்படத்தை கடந்த 19ஆம் தேதி தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

  • “To play a small part in a film that captures one of the most iconic moments in sporting history has been an absolute honour!83 for me is an ode to every woman who puts her husband’s dream before her own...” #ThisIs83 pic.twitter.com/JHTjQE8KC3

    — Deepika Padukone (@deepikapadukone) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தங்களது கனவுகளைத் தாண்டி, தங்களின் கணவர்களின் கனவுகளுக்கு முக்கியத்துவம் தரும் அனைத்துப் பெண்களுக்குமான கவிதையாக இப்படம் அமையும் எனக் குறிப்பிட்டு இந்தப் புகைப்படத்தை தீபிகா பகிர்ந்திருந்த நிலையில், தீபிகாவின் இந்தக் கருத்திற்கு தற்போது கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

”ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தீபிகா இதுபோன்ற பின்னோக்கிய கருத்துகளைப் பகிர்வது எரிச்சலூட்டுகிறது” என்றும், ”உங்கள் கணவரின் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நீங்கள் உங்கள் வேலையை விட்டுச் செல்வீர்களா?” எனக் கேள்வி எழுப்பியும் ரசிகர்கள் கண்டனக் குரல்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

  • Just to promote the film such a backward chatter. How annoying.

    — ebolly1 (@ebolly1) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

”மேலும், இது 1983ஆம் வருடம் அல்ல. பாலின ஏற்றத்தாழ்வுகள் அழிந்துவரும் நிலையில், தங்கள் மனைவிகளின் கனவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கணவர்களை இந்த நூற்றாண்டிலாவது எதிர்நோக்கத் தொடங்குவோம்” எனவும் தீபிகாவிற்கு மற்றொரு சமூக வலைதள பயனாளி அறிவுறுத்தியுள்ளார்.

  • Will you out your career behind to promote your spouse career ?

    — Joiedevivre (@Truth_Justice1) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சப்பக், பிகு உள்ளிட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மையப்படுத்தி இதற்கு முன் தீபிகா நடித்துள்ள போதிலும், தீபிகாவின் 83 திரைப்படம் குறித்த இந்தப் பதிவு பெண்ணியவாதிகளின் மத்தியிலும் இணைய பயனாளிகள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: '83' திரைப்படத்தின் புதிய லுக்! - ரோமி பாட்டியாவாக தீபிகா படுகோன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.