நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'டியர் காம்ரேட்'. மித்ரி மூவிஸ் தயாரித்த இப்படத்தை, அறிமுக இயக்குநர் பாரத் கம்மா இயக்கியுள்ளார்.
தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் டியர் காம்ரேட் படம் சமீபத்தில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு, யூ-ட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அது தற்போது மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துவருகிறது.
![டியர் காம்ரேட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12255128_dear.jpg)
இதன்மூலம் யூ-ட்யூபில் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை 'டியர் காம்ரேட்' திரைப்படம் படைத்துள்ளது. இதனைப் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகை நஸ்ரியா வெளியிட்ட செல்பி